பேரிரைச்சலுடன் பாயும் ஆகாய கங்கை.. நயாகராவை விட உயரமான ஜோக் நீர் வீழ்ச்சியின் ஆவேசத்தை பாருங்க
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் தென் மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், புகழ் பெற்ற ஜோக் நீர் வீழ்ச்சி நிரம்பி வழியும் காட்சி காண்போரை அச்சுறுத்துவதாக உள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜோக் நீர் வீழ்ச்சி. இதன் உயரம் 253 மீட்டர். அதாவது, சுமார் 829 அடியாகும். அமெரிக்காவிலுள்ள புகழ் பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சியே 51 மீட்டர் உயரம்தான். அப்படியானால் ஜோக் நீர் வீழ்ச்சி நிரம்பி வழிந்தால் அதை பார்க்க எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள்.

கன மழையால், இப்போது அதுதான் நடக்கிறது. ஓ.. என்ற இரைச்சலுடன், பெரும் வெள்ளம் நீர் வீழ்ச்சியில் பாய்வதை சிலர் ஆச்சரியமாகவும், சிலர் ரசனையோடும், பலரும் அச்சத்தோடும் பார்க்கிறார்கள்.
இயற்கையின் சக்தி எத்தகையது என்பதற்கு, ஜோக் நீர் வீழ்ச்சியின் பெரும் இரைச்சலுடன் பாயும் தண்ணீர் ஒரு சாட்சி. வீடியோவில் பார்க்கும்போதே மயிர்கூச்செரிய வைக்கும் இந்த நீர் வீழ்ச்சியை, நேரில் சென்று பார்த்தவர்கள் நெகிழ்ந்து கிடக்கிறார்கள். அவர்கள் தாங்கள் வீடியோவாக சிறைபிடித்த காட்சிகளை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோக்கள் வைரலாக இணையத்தில் சுற்றி வருகிறது. நமது வாசகர்களுக்கான சிறப்பு ஏற்பாடாக, இன்றைய தினம் ஜோக் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் எப்படி கொட்டுகிறது என்பது பற்றிய வீடியோவை வரவழைத்துள்ளோம். இதோ நீங்களும் அந்த கண்கொள்ளா காட்சியை பாருங்கள்.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications