நீங்க செய்வது சரியா? கமல்ஹாசனுக்கு ஆதரவாக வந்த நடிகர் சிவராஜ்குமார்.. மேடையில் கண்சிவந்த ‛சிவண்ணா'!
பெங்களூர்: ‛‛கமல் சார் பற்றி நான் அதிகம் பேச வேண்டிய இல்லை. கன்னட மொழி பற்றி கமல் ரொம்ப நன்றாக பேசினார். நான் அவரை பார்த்து வளர்ந்தவன். அவரது பெரிய ரசிகர். ஆனால் நீங்கள் செய்வது சரியா? தவறா?'' என்று நடிகர் சிவராஜ்குமார் பெங்களூரில் நடந்த தனியார் டிவி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் ‛தக் லைஃப்'. இந்த திரைப்படத்தில் சிலம்பரன், திரிஷா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளன. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது, சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார்.

அப்போது கமல்ஹாசன் பேசுகையில், ‛‛ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால் இங்கு வந்துள்ளார். இதன் காரணமாக தான் எனது பேச்சை தொடங்கும் போது உயிரே.. உறவே.. தமிழே என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்'' என்றார்.
‛‛தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது'' என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கன்னட அமைப்பினர், முதல்வர் சித்தராமையா உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். கமல், நாளைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் கர்நாடகாவில் ‛தக் லைஃப்' திரைப்படம் வெளியிடப்படாது என்று கன்னட திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவராஜ் குமார் பேசினார். அப்போது அவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசினார். இதுதொடர்பாக சிவராஜ் குமார் பேசும்போது கூறியதாவது: கன்னட மொழி குறித்து கமல் ஹாசன் ரொம்ப நன்றாக பேசினார். பெங்களூருக்கு அதிக மதிப்பு கொடுத்து பேசினார். நான் அவரை பார்த்து வளர்த்தவன்.
நான் அவரது பெரிய ரசிகர். தந்தையை (நடிகர் ராஜ்குமார்) வைத்து கொண்டு ஏன் கமல்ஹாசனின் பெரிய ரசிகர் என்று சொல்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கலலாம் அதற்கு பதில் என்னவென்றால் அப்பா குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு என்று ஒரு மரியாதை இருக்கும். ஆனால் அவர் (கமல்ஹாசன்) வேறு. நான் அவரை பார்த்து உத்வேகம் அடைந்தவன். இதனால் தான் அவரது ரசிகர் என்று நான் சொல்கிறேன்.
இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கத்தை 100 சதவீதம் கமல் கொடுப்பார். என்னை மரியாதையாக நிகழ்ச்சிக்கு அழைத்தனர். அவர்களுக்கு மரியாதை கொடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்றேன். கன்னடம் மீதான காதல் என்பது யாரும் கூறிவிட்டார்கள் என்று வரக்கூடாது. இது வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும். கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
நான் இங்கு வந்தபோது மொழி பிரச்சனை பற்றி கேட்கிறீர்கள்? கன்னடத்தை அனைத்து இடங்களிலும் நேசிக்க வேண்டும். கன்னடத்துக்காக வாழவும், தேவையென்றால் சாகவும் நான் ரெடி. வெறும் வாய்மொழிக்காக கன்னடம் என்று பேசிவிட்டு செய்தியில் இடம்பெற போஸ் கொடுத்துவிட்டு செல்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.
கன்னடத்துக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நீங்களே தேடி கண்டுபிடியுங்கள். அதிலேயே உங்களுக்கு பதில் கிடைக்கும். நீங்கள் கன்னடத்துக்காக என்ன செய்கிறீர்கள்? வெறும் ஸ்டார் நடிகர்கள் சினிமாக்களுக்கு இடம்கொடுப்பதை தாண்டி புதியவர்களை ஆதரிக்க வேண்டும். ஆனால் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) அப்படி செய்வது இல்லை.
இதனால் எப்படி கன்னடம் வளரும். கன்னடத்தை வளர்ப்பது நம் கையில் உள்ளது. நீங்கள் செய்வது சரியா? தவறா? என்று உங்களின் மனதை தொட்டு நீங்களே கேட்டு கொள்ளுங்கள். அதில் உங்களுக்கே விடை கிடைக்கும். இதனால் கமல் சார் பற்றி நான் அதிகம் பேச வேண்டிய இல்லை'' என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications