இந்தியையா திணிக்கிறீங்க.. பெங்களூரில் ஹோட்டலை அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர்! மத்திய குழு ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் ‛இந்தி திவாஸ்' நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற இருந்தது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‛ராஜபாஷா சமீதி' என்ற குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் பெங்களூர் வந்தனர். இதற்கு கர்நாடகா ரக்சன வேதிகே அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் ஆக்ரோஷமான கன்னட அமைப்பினர் நிகழ்ச்சி நடைபெற இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்து இந்தியில் இருந்த பேனர்களை கிழித்து, சேர், டேபிளை அடித்து நொறுக்கினர். இதனால் மத்திய குழுவினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர்.

மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயன்று வருவதாக தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும் இந்தி மொழிக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.

kannada-activists-storming-hindi-diwas-event-in-bengaluru-and-41-arrested

இந்நிலையில் தான் பெங்களூர் தாஜ் வெஸ்ட் என்ற 5ஸ்டார் ஹோட்டலில் கடந்த 3 நாட்களாக ‛இந்தி திவாஸ்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் எதிர்ப்பையும் மீறி நேற்று ‛இந்தி திவாஸ்' நிகழ்ச்சி தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‛ராஜபாஷா சமீதி'யை சேர்ந்த 6 பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதையடுத்து நாராயண கவுடா தலைமையிலான கர்நாடகா ரக்சன வேதிகே அமைப்பை சேர்ந்தவர்கள் ஹோட்டல் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள், ‛‛இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது. இதற்காக ‛இந்தி திவாஸ்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது'' என்று கூறினர். அதுமட்டுமின்றி இந்தி திவாஸ் நிகழ்ச்சிக்கும், இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் ஹோட்டலின் நுழைவுப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கோபமான கன்னட அமைப்பினர் ஹோட்டலுக்குள் நுழைந்து ‛இந்தி திவாஸ்' நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் சென்றனர். அந்த அறையை அவர்கள் சூறையாடினர். அங்கிருந்த சேர், டேபிளை உடைத்தனர். இந்தி மொழியில் இருந்த பேனர்களை கிழித்தனர். இதனால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிகழ்ச்சியை பாதியில் கைவிட்டு தங்களின் இருக்கைகளில் இருந்து சென்றனர்.

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த ஹைகிரவுண்ட் போலீசார் விரைந்து வந்தனர். கன்னட அமைப்பினரை கைது செய்தனர். மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛நாடாளுமன்ற அலுவலல் மொி கமிட்டி சார்பில் செப்டம்பர் 23ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்தி திவாஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கடைசி நாளான நேற்று காலை 10.45 மணி முதல் 11மணிக்குள் கன்னட அமைப்பை சேர்ந்த 30 முதல் 40 பேர் வந்து ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இதனால் அந்த நிகழ்ச்சிக்கு பிரச்சனை ஏற்பட்டது. மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்'' என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+