கொலை கேஸில்.. தோண்ட தோண்ட பூதம்.. கொன்றுவிட்டு "பார்ட்டி" செய்த தர்ஷன்.. வெளியான ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவை உலுக்கிய ரேணுகாசாமி கொலை வழக்கில் தற்போது மற்றொரு கன்னட நடிகரின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. கன்னட நடிகர் சிக்கண்ணாவை பெங்களூரு காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை ஊருக்கு அழைத்து வரும் போது தர்ஷனுடன் சிக்கண்ணா இருந்ததாக கூறப்படும் நிலையில் வழக்கின் சாட்சியாக சிக்கண்ணா பரிசீலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

bangalore crime

சிக்கண்ணாவிடம் போலீஸார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சிக்கண்ணா சாட்சியாக ஆக்க போலீசார் முன்வந்ததாக கூறப்படுகிறது. ஜூன் 8ஆம் தேதி குற்றம் நடந்தபோது சிக்கண்ணா தர்ஷனுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொலைக்கு முன்னும், பின்னும் இவர்கள் பார் ஒன்றில் ஒன்றாக கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ரேணுகாசாமி பிணைக் கைதியாக வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஷெட்டிற்கு இவர்கள் ஒன்றாக சென்றதாகக் கூறப்படுகிறது. இவரை கொன்ற பின் இருவரும் ஒன்றாக ஷெட் ஒன்றிற்கு சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்தமாக 19 பேர் இதுவரை இந்த வழக்கில் கைதாகி உள்ளனர்.

கொலை: நடிகர் தர்ஷன் தனது காதலியை கிண்டல் செய்தவரை கொன்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இதில் கொலை செய்யப்பட்டவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

கொலை வழக்கு தொடர்பாக கன்னட நடிகர் "டி பாஸ்" தர்ஷன் போலீஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு உள்ளார். நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிய ரேணுகா சுவாமி என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சுவாமி சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த ரேணுகா சுவாமி, சித்ரதுர்காவை சேர்ந்த மெடிக்கல் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார். இவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை மெசேஜாக அனுப்பி உள்ளார். இந்த பவித்ரா கவுடா கடந்த 10 வருடமாக தர்ஷன் உடன் காதலில் இருக்கிறார்.

காதலியை கிண்டல் செய்த ரேணுகா சுவாமியை பவுன்சர்ஸ் வைத்து தர்ஷன் மோசமாக தாக்கி உள்ளார். அதில் ரேணுகா சுவாமி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இதில் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இடத்தில் தர்ஷன் இருந்துள்ளார். அவர் கண் முன்தான் கொலை நடந்து உள்ளது.

பிரேத பரிசோதனை: இதில் கொலை செய்யப்பட்டவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. நடிகர் தர்ஷன் மற்றும் அவரின் கும்பல் ரேணுகா சுவாமியை மின்சாரம் தாக்கி சித்திரவதை செய்ததாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை வைத்து தாக்கி கொடுமை படுத்தி உள்ளனர். அதன்பின் மோசமாக தாக்கி உடலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளனர். உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மின்சாரம் காரணமாகவே ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை: போலீஸ் விசாரணையில், இறந்த ரேணுகா சுவாமி சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் பெங்களூரு வந்தடைந்தது தெரியவந்தது. பின்னர் பிற்பகல் 2:30 மணியளவில் காமக்ஷிபாளையா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள ஷெட் ஒன்றிற்கு ரேணுகா சுவாமி அழைத்துச் செல்லப்பட்டார். மூன்று மணி நேரம் கழித்து தர்ஷன் அந்த ஷெட்டிற்குள் நுழைந்ததாக சிசிடிவி காட்சிகள் தெரிவிக்கின்றன. தர்ஷன் முன்னிலையில் தாக்குதல் நடந்துள்ளது. அவர் போன சில நிமிடங்களில் உடல் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் கொலை நடந்த இடத்தில் தர்ஷன் இருந்தது உறுதியாகி உள்ளது.

சரியாக சனிக்கிழமை இரவு உடல் அப்புறப்படுத்தப்பட்டது. ஜூன் 9-ம் தேதி இந்த கொலை நடந்தது. இந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் தர்ஷன் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த ரேணுகாசுவாமிக்கு வயது 33. மேலும் விசாரணைக்குப் பிறகே கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+