நடிகையை பிளான் போட்டு கடத்திய கணவர்.. பரபரப்பான வழக்கில் தயாரிப்பாளர் சொன்ன தகவல்.. ட்விஸ்ட்
பெங்களூர்: கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில் கன்னட நடிகை சைத்ராவை அவரது கணவரே காரில் கடத்தி சென்றார். போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இருவரும் குடும்ப பிரச்சனையை பேசி தீர்த்து கொள்வதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னட சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருபவர் சைத்ரா. இவரும் ஹர்ஷ்வர்த்தன் என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் கடந்த 2023ம் ஆண்டு கரம் பிடித்தனர்.
ஹர்ஷ்வர்தன் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தர்ஷன் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். திரைப்படம் மற்றும் சீரியல்கள் தயாரித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ‛நின்னல்லேனோ ஹேலபேகு' என்ற திரைப்படத்தை ஹர்ஷ்வர்தன் தயாரித்தார். இந்த திரைப்படத்தில் நடிகையாக நடித்தவர் சைத்ரா. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அதன்பிறகு தான் 2023ம் ஆண்டில் திருமணம் முடித்தனர்.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் தான் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவருக்கும் குடும்ப விஷயம் தொடர்பாக பிரச்சனை வந்துள்ளது.இதனால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஹர்ஷ்வர்த்ன் ஹாசனில் வசித்து வருகிறார்.
நடிகை சைத்ரா கடந்த 9 மாதங்களாக தனது மகளுடன் பெங்களூர் மாகடி ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சீரியல், சினிமா என்று அவர் பிஸியாக இருக்கிறார். ஹர்ஷ்வர்தனுக்கு தனது மகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் சைத்ரா பார்க்க அனுமதிக்கவில்லை.
இதனால் ஹர்ஷ்வர்தன் தனது மனைவியை கடத்தி குழந்தையை கைப்பற்ற நினைத்தார். இதற்காக அவர் தனது நண்பரை வைத்து திட்டமிட்டார். நண்பர் கவுசிக்கை அழைத்து நடிகை சைத்ராவிடம் பேச கூறினார். அதன்படி கவுசிக், ‛‛மைசூருவில் சூட்டிங் உள்ளது. அந்த சூட்டிங்கிற்கும் வர முடியுமா? ஓகே என்றால் பெங்களூர் வந்து காரில் அழைத்து செல்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய சைத்ரா, ரூ.20 ஆயிரம் அட்வான்ஸ் கோரினார். அதனை கவுசிக் வழங்கினார். அதன்பிறகு கடந்த 9 ம் தேதி காலை 8 மணியளவில் பெங்களூர் மைசூர் ரோடு மெட்ரோ ரயில் நிலையம் சென்று கவுசிக் தனது நண்பர் ஹர்ஷ்வர்தன் கூறியபடி ஒரு காரில் நடிகை சைத்ராவை மைசூரு நோக்கி அழைத்து சென்றார்.
சைத்ரா தனது குடும்பத்தினருக்கு போன் செய்து பேசினார். அப்போது மைசூருவில் நடக்கும் சூட்டிங்கிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்தார். ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் காலை 10.30 மணிக்கு கணவர் ஹர்ஷ்வர்தன் நடிகை சைத்ராவை கடத்தினார். கவுசிக் தான் ஓட்டி சென்ற காரை ஹர்ஷ்வர்த்தனிடம் வழங்கிவிட்டு பாதிவழியில் சென்றார். இதனை சைத்ரா தனது செல்போனில் இருந்து நண்பர் கிரீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதோடு ஹர்ஷ்வர்தன் தனது மாமியார் சித்தம்மாவுக்கு போன் செய்து, ‛‛உங்கள் மகளை கடத்தி உள்ளேன். எனது மகளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் உங்கள் மகளை நான் பத்திரமாக அனுப்புவேன். இதில் காலதாமதம் செய்ய வேண்டாம்'' என்று மிரட்டி உள்ளார்.
பிறகு சைத்ராவின் இன்னொரு உறவினருக்கு போன் போட்டு ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவிற்கு குழந்தையை கொண்டு வந்தால் சைத்ராவை விடுவதாக கூறினார். இதனால் பயந்துபோன சைத்ராவின் தாய் இதுபற்றி தன்னுடைய 2வது மகள் லீலாவிடம் தெரிவித்தார்.
சைத்ராவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து எப்படியாவது அவரை மீட்க வேண்டும் என்று பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களால் சைத்ராவை கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்ததால் குடும்பத்தினர் முடிந்தவரை தேடிவிட்டு போலீசில் புகார் செய்தனர்.
சைத்ராவின் சகோதரி லீலா பெங்களூர் பேடராயனபுரா போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பதை அறிந்த ஹர்ஷ்வர்தன், சைத்ராவை பெங்களூரில் கொண்டு வந்து விட்டார். அதுமட்டுமின்றி போலீசார் ஹர்ஷ்வர்தன் மற்றும் கடத்தலுக்கு உதவிய அவரது நண்பர் கவுசிக் உள்ளிட்டோரை பிடித்தனர்.
போலீஸ் நிலையத்தில் ஹர்ஷ்வர்தன் குடும்பத்தினர் தங்களின் குடும்ப பிரச்சனையை பேசி தீர்த்து கொள்வதாக தெரிவித்தனர். அதற்கு சைத்ராவின் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ஹர்ஷ்வர்தன் - நண்பர் கவுசிக்கிடம் அவர்களின் விவரங்களை வாங்கி கொண்டு திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் பெங்களூரை அதிர வைத்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications