‛எமோஷனல் கனெக்ட்’.. தற்கொலை முடிவை கைவிட்ட நடிகை ரம்யா! அம்மாவுக்கு அடுத்து ராகுல் தானாம்!உருக்கம்
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யா தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தபோது ராகுல் காந்தி தான் ஆதரவு அளித்ததாகவும், அம்மாவுக்கு பிறகு தனக்கு ராகுல் காந்தி தான் என உருக்கமாக கூறியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை ரம்யா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். கடந்த 2012ம் ஆண்டில் நடிகை ரம்யா திரையுலகில் கொடிகட்டி பறந்தபோதே காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். இளைஞர் காங்கிரஸில் இணைந்து செயல்பட தொடங்கினார்.

மண்டியா எம்பியான நடிகை ரம்யா
மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 2013ல் நடந்த இடைத்தேர்தலில் நடிகை ரம்யா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார். அதன்பிறகு 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரம்யா தோல்வியடைந்தார். ரம்யாவை ஜேடிஎஸ் கட்சியின் வேட்பாளர் சிஸ் புட்டராஜூ 5,500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவராக நடிகை ரம்யா செயல்பட்டார்.

மீண்டும் லைம்லைட்டில் நடிகை ரம்யா
அதன்பிறகு அந்த பதவியில் இருந்து விலகிய ரம்யா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடிகை ரம்யா பற்றிய பல்வேறு விஷயங்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடகா சட்டசபை தேர்தலில் அவர் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகின. மேலும் நடிகை ரம்யா மூலம் நடிகர் கிச்சா சுதீப்பை காங்கிரஸ் கட்சியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதுமட்டுமின்றி ரம்யா விரைவில் பாஜகவில் இணைவதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் மீண்டும் ரம்யா லைம்லைட்டில் வந்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில்..
இந்நிலையில் தான் நடிகை ரம்யா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதாவது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‛வீக்எண்ட் வித் ரமேஷ்' சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பங்கெடுத்தார். இந்த நிகழ்ச்சியை நடிகர் ரமேஷ் அரவிந்த் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ரம்யா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா தனது வளர்ப்பு தந்தை ஆர்டி நாராயண் கடந்த 2013ல் மறைந்தபோது ஏற்பட்ட சம்பவம் குறித்தும், ராகுல் காந்தி பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி நடிகை ரம்யா கூறியதாவது:

2 வாரத்தில் நாடாளுமன்றத்தில்..
என் அப்பா ஆர்டி நாராயண் மறைந்த பிறகு 2 வாரம் கழித்து நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். அப்போது எனக்கு யாரையுமே தெரியாது. சொல்லப்போனால் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்பது கூட நான் அறிந்தது இல்லை. அதன்பிறகு நான் கற்றுக்கொண்டேன். எனக்குள் இருந்த வருத்தத்தை மறக்க பணி செய்ய தொடங்கினேன். இதற்கு மண்டியா மக்கள் ஆதரவு கொடுத்தனர்.

அம்மாவுக்கு அடுத்து ராகுல் காந்தி தான்
என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய முதல் நபர் என்றால் அது எனது அம்மா. அதன்பிறகு எனது அப்பா. மூன்றாவதாக ராகுல் காந்தி. ஏனென்றால் நான் என் தந்தையை இழந்தபோது மிகவும் மனம்வருந்தி இருந்தேன். வாழ்க்கையை முடித்து கொள்ள தற்கொலை செய்ய நினைத்தேன். மேலும் 2014 தேர்தலிலும் தோற்றேன். துக்கம் நிறைந்த காலமாக அது இருந்தது. அந்த நேரத்தில் ராகுல் காந்தி தான் எனக்கு ஆதரவாக இருந்தார். எமோஷனல் கனெக்ட்டாக ராகுல் காந்தி இருந்து ஆதரவு வழங்கினார்'' என கூறினார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications