"தமிழிலிருந்து தான் கன்னடம் உருவானது என்று சொல்லிவிட முடியாது.." மொழியியல் ஆய்வாளர் சொன்ன கருத்து
பெங்களூர்: பல்வேறு மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவரும் ஆய்வாளருமான ஆண்ட்ரூ ஓலெட், கன்னட மொழியானது தமிழில் இருந்து நேரடியாக உருவானது எனச் சொல்ல முடியாது எனக் கூறியிருக்கிறார். அவை சகோதர மொழிகள் என்றாலும் நேரடியாகக் கன்னட மொழியில் இருந்து மட்டுமே தமிழ் உருவானது எனச் சொல்லிவிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் அறிஞராக இருப்பவர் ஆண்ட்ரூ ஓலெட்.. இவருக்குத் தான் 2025ஆம் ஆண்டிற்கான இன்ஃபோசிஸ் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலுக்கான பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தப் பரிசைப் பெற அவர் சமீபத்தில் கர்நாடகத் தலைநகர் பெங்களூருக்கு வந்திருந்தார்.

மொழியியல் ஆய்வாளர்
சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் அவர், மேலும் தற்போது சாரா பியர்ஸ் டெய்லருடன் இணைந்து 9ஆம் நூற்றாண்டின் கன்னடக் கவிதை நூலான கவிராஜமார்க்கத்தையும் மொழி பெயர்ப்பு செய்து வருகிறார். இதற்கிடையே அவரிடம் பிரபல ஆங்கில ஊடகமான டெக்கன் ஹெரால்டு-க்கு அவர் நேர்காணல் அளித்திருந்தார். அதில் அவர் தமிழ் கன்னட மொழிகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார்.
மொழிகள்
தக் லைப் பட இசை வெளியிட்டு விழாவின்போது கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்திருந்தது என்பது போலக் கமல் கூறியிருந்தார். அது பெரிய சர்ச்சையாக மாறியது. இது தொடர்பான கேள்விக்கு ஓலெட், திராவிட மொழியியல் ஒப்பீடு ஆய்வுகளில் சிறந்து விளங்கிய பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தியை நான் பின்பற்றுகிறேன். மொழிகளுக்கு இடையிலான உறவுகளை விவரிக்கும் மரபுவழி "குடும்ப மரபுகள்" அல்லது "மரபியல் வரைபடங்கள்" போதுமானது இல்லை.. அவை மொழிகளுக்கு இடையேயான உறவுகளை எளிமைப்படுத்திவிடுகிறது.
திராவிட மொழிக் குடும்ப மரபில் வட திராவிட மொழிகளும், பல தென் திராவிட மொழிப் பிரிவுகளும் அடங்கும். தென் திராவிட மொழிகளில், தமிழ், மலையாளம், கன்னடம், கொடவா போன்ற பல மொழிகள் சகோதரி மொழிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், இது காலப்போக்கில் மொழிகள் எப்படி வளர்ந்தன என்பதன் எளிமைப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவமே ஆகும். கன்னட இலக்கணத்தில் சில அம்சங்கள் உள்ளன.. அவை தமிழ் மொழியில் இருந்து மட்டுமே உருவானவை என்று சொல்லிவிட முடியாது.
தமிழ்- கன்னடம் உறவு
மொழியியல் ரீதியாகப் பார்த்தோம் என்றால் கன்னட இலக்கணத்தில் சில தனித்துவமான அம்சங்கள் உள்ளன. தமிழிலிருந்து கன்னட மொழி நேரடியாக உருவானது என்ற வாதத்தை இது ஆதரிப்பதாக இல்லை" என்றார். அதாவது தமிழுக்கும் கன்னடத்திற்கும் நீண்ட நெடிய உறவு இருந்தாலும் கன்னட மொழி முழுக்க முழுக்க தமிழ் மொழியில் இருந்தது வந்தது எனச் சொல்ல முடியாது.. கன்னட மொழிக்கு மேலும் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளன என்பதே அவரது கருத்தாகும்.
பின்னணி
தக் லைப் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். அப்போது அவரை வரவேற்றுப் பேசும்போது தமிழ் மொழியில் இருந்தே கன்னடம் பிறந்தது என்பது போலக் கமல் பேசியிருந்தார். இது அப்போது பெரியளவில் சர்ச்சையானது. கன்னட அமைப்புகள் கமலுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். இதனால் தக் லைப் திரைப்படம் கர்நாடகாவில் கடைசி வரை ரிலீஸ் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications