நேற்று பிறந்தநாள்! இன்று தற்கொலை! பெங்களூர் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த இயக்குநர் குருபிரசாத்
பெங்களூர்: கன்னட பட இயக்குநர் குருபிரசாத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். அவருக்கு 52 வயதாகிறது. நேற்றைய தினம் நவம்பர் 2ஆம் தேதி அவர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
கன்னட படங்களை இயக்கிய குருபிரசாத், சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் சினிமா தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அவர் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அழுகிய நாற்றம் அடிப்பதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வீட்டின் உள்ளே போடப்பட்டிருந்த தாழ்ப்பாளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போலீஸாரால் அங்கு அழுகிய நிலையில் இருந்த குருபிரசாத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இவருடைய தயாரிப்பு படங்கள் அண்மைகாலமாக சரியாக ஓடவில்லை என தெரிகிறது. இதனால் குருபிரசாத் பொருளாதார சிக்கலில் சிக்கி அதை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னட திரைப்பட இயக்குநர் குருபிரசாத் 2006 ஆம் ஆண்டு மாதா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவருடைய எட்டேலு மஞ்சுநாதா என்ற திரைப்படம் 2009ஆம் ஆண்டு கர்நாடகா மாநில அரசின் திரைப்பட விருதை பெற்றது. 2024 ஆம் ஆண்டு வெளியான ரங்கநாயக்கா படம் வசூலில் பெரும் சரிவை சந்தித்தது. மேலும் 2019ஆம் ஆண்டு தங்களிடம் புத்தகங்களை வாங்கிய குருபிரசாத் அதற்கான பணத்தை செலுத்தவில்லை என போலீஸில் கடை உரிமையாளர் புகார் அளித்திருந்தார்.
100 புத்தகங்களை தள்ளுபடி கோரிய குருபிரசாத், தலா 75 புத்தகங்கள் கொண்ட 5 தொகுப்பை வாங்கினார். இதன் விலை ரூ 65 ஆயிரம். ஆனால் அந்த பணத்தை கொடுக்கவில்லை என்றும் அவருடைய தொடர்பு எண் உள்பட முகவரியையும் அவர் மாற்றிவிட்டார் என புகார் எழுந்தது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications