கர்நாடகாவில் உக்கிர போராட்டம்..கன்னட மொழியில் இல்லாத வர்த்தக நிறுவன பெயர் பலகைகள் அடித்து துவம்சம்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கன்னட மொழியில் இல்லாத வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து துவம்சம் செய்து வன்முறையில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டைப் போல மொழி இன உணர்வு பிரச்சனை முதன்மையாக உள்ள மாநிலம் கர்நாடகா. அண்மையில் மார்வாரி பெண் ஒருவரை கன்னடர்கள், கன்னடத்தில் பேச சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் கன்னட மொழியில்தான் இருக்க வேண்டும் என கன்னட ரக்ஷண வேதிகே அமைப்புகள் போராட்டத்தையும் நடத்தின.

இதனைத் தொடர்ந்து அண்மையில் பெங்களூர் மாநகராட்சி ஒரு உத்தரவை பிறப்பித்தது. வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் கன்னட மொழி 60% பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அப்படி கன்னட மொழியில் பெயர் பலகைகள் இல்லாத வர்த்தக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்பதுதான் அந்த அதிரடி உத்தரவு. இதற்கு பிப்ரவரி 28-ந் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கன்னட மொழியில் பெயர் பலகைகளை வைக்க வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பெங்களூரில் இன்று எம்ஜி ரோடு, பிரிட்ஜ் ரோடு, யுபி சிட்டி, சாம்ராஜ்பேட், கெம்பே கவுடா ரோடு, காந்தி நகர், ரெசிடென்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கன்னட அமைப்பினர் குவிந்தனர். அப்போது கன்னட மொழியில் பெயர் பலகைகள் இல்லாத வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களின் பெயர் பலகைகளை அடித்து தூக்கி எறிந்தனர். சிலர் அந்த அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இத்தனையும் போலீசார் முன்னிலையிலேயே நடைபெற்றது. அப்போது, கர்நாடகாவின் ஆட்சி மொழி கன்னடம்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும் என ஆவேசத்துடன் முழக்கங்கள் எழுப்பினர்.
#WATCH | Bengaluru: Protestors from Kannada Raksha Vedhike were detained by Police for holding a protest demanding all businesses and enterprises in Karnataka to put nameplates in Kannada. pic.twitter.com/A5eQgLWqib
— ANI (@ANI) December 27, 2023
இதனால் பெங்களூர் மாநகரில் மால்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் அச்சத்துடன் இயங்குகின்றன. இந்தப் போராட்டம் தொடர்பாக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டிஏ நாராயண கவுடா கூறுகையில், சட்டப்படி கர்நாடகாவில் பெயர் பலகைகளில் கன்னட மொழி 60% இடம் பெற்றிருக்க வேண்டும். கர்நாடகாவில் வர்த்தகம் செய்யும் யாரையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இங்கே நீங்கள் வர்த்தகம் செய்யலாம்.. ஆனால் எங்கள் மொழிக்கு மரியாதை கொடுத்துதான் ஆக வேண்டும். கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தராமல் கன்னட மொழியை சிறுமைப்படுத்தினால் உங்களால் இங்கே எதுவுமே செய்ய முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications