இதோ லிஸ்ட்.. 32 தொகுதிகளில் தோல்வி! பாஜகவுக்கு பிரசாரம் போன நடிகர் சுதீப்புக்கு பெரியஅடி-ட்ரோல்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தான் அவர் பிரசாரம் செய்த 75 சதவீத தொகுதிகளில் வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்நிலையில் தான் நடிகர் சுதீப் எத்தனை தொகுதிகளுக்கு பிரசாரம் செய்தார்? எத்தனை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்? எவ்வளவு பேர் தோல்வியடைந்தனர்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியையும் பெற்றது.
கர்நாடகாவில் 113 இடங்களில் வென்றால் ஒரு கட்சியால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 தொகுதிகளில் வென்றனர். இந்த தோல்வி மூலம் பாஜக கர்நாடகாவில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மேலும் தென்மாநிலங்களில் இருந்து பாஜக ஆட்சி இல்லாத நிலை உள்ளது.

இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் சுதீப், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். தனது கஷ்டகாலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை உதவிய நிலையில் அவருக்கு கைமாறாக பாஜகவுக்கு பிரசாரம் செய்வதாக அவர் தெரிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் நடிகர் சுதீப் தீவிரமாக பாஜகவுக்கு பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் தான் நடிகர் சுதீப் பிரசாரத்தால் பாஜகவில் வெற்றி பெற்ற மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி சுதீப் பிரசாரம் செய்தவர்களில் ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதியில் போட்டியிட்ட பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றார். அதேபோல் தொட்டப்பள்ளாப்புரா பாஜக வேட்பாளர் தீரஜ் வெற்றி பெற்றார். சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வெற்றி பெற்றனர்.
மேலும் ஜெகதீஷ் ெஷட்டரை எதிர்த்து உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதி பாஜக வேட்பாளர் மகேஷ் தென்கினகாய், பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக வேட்பாளர் முனிரத்னா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் தவிர லிங்கசூகூர், குஷ்டகி, ஜமகண்டி ஆகிய தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் என மொத்தம் 10 பேர் வெற்றி பெற்றனர்.

மாறாக சுதீப் பிரசாரம் சிக்கபள்ளாப்பூரில் அமைச்சர் சுதாகர், வருணா மற்றும் சாமராஜநகர் தொகுதிகளில் அமைச்சர் சோமண்ணா, பல்லாரி புறநகர் அமைச்சர் ஸ்ரீராமுலு ஆகியோர் தோல்வியடைந்தனர். இதுதவிர ஹொன்னாளி, சகாப்புரா, குண்டலுபேட்டை, கதக், ஹனுர், கித்தூர், ஜகலூர், கல்கட்டகி, தாவணகெரே வடக்கு , தாவணகெரே வடக்கு, ரோண், யாதகிரி, சண்டூர், பேடகி, கொள்ளேகால், மொலகால்மூரு, சித்ரதுர்கா, கொப்பல், யாதகிரி, பாதாமி, எலபுர்கா, தேவனஹள்ளி, பீலகி, கூட்லகி, மான்வி, பாகல்கோட்டை, எமகனமரடி, சிட்லகட்டா என மொத்தம் 32 தொகுதிகளின் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் நடிகர் சுதீப்பை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருவதோடு, ட்ரோல் செய்கின்றனர். மேலும் இதுதொடர்பான மீம் மற்றும் வீடியோக்கள் வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் தான் பசவராஜ் பொம்மை விளக்கம் அளித்துள்ளார். அதில், ‛‛நடிகர் சுதீப் என்பவர் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். தனக்கு தெரிந்த வேட்பாளர்களுக்கு அவர் பிரசாரம் செய்தார். அவர்கள் தோல்வியடைந்த நிலையில் அதை வைத்து கிண்டல் செய்வது தேவையற்றது'' என கூறியுள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications