மகனிடம் குறி சொன்ன பூசாரி.. கர்நாடகா தேர்தலில் 2 தொகுதி கேட்கும் சித்தராமையா.. பின்னணியில் என்ன?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரான சித்தாராமையா வருணா தொகுதியில் போட்டியிடும் நிலையில் கோலார் தொகுதியில் களமிறங்க திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். இதன் பின்னணியில் பூசாரியின் அருள் வாக்கு உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
ஜேடிஎஸ் சார்பில் 90க்கும் அதிகமான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. ஆம்ஆத்மியும் 90 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில் நேற்று காங்கிரஸ் முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

2 தொகுதிகளில் போட்டியிட விருப்பம்
இதில் கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணாவில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையாக கடந்த 2018 தேர்தலைபோல் வருணாவுடன் சேர்த்து கோலார் தொகுதியிலும் போட்டியிட காய்நகர்த்தி வருகிறார். இதுபற்றி சித்தராமையா கூறுகையில், ‛‛நான் கோலார் மற்றும் மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடத்திடம் விருப்பம் தெரிவித்து இருந்தேன். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் வருணாவில் போட்டியிட கட்சி அனுமதி அளித்துள்ளது. கோலார் தொகுதியில் போட்டியிடவும் சீட் கொடுக்கும்படி கேட்டுள்ளேன். இதில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது'' என்றார்.

குறி சொன்ன பூசாரி
இந்நிலையில் தான் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுவதன் பின்னணியில் பூசாரியின் அருள்வாக்கு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது சமீபத்தில் சித்தராமையாவின் மகனும், வருணா தொகுதி எம்எல்ஏவுமான யதீந்திரா கடந்த ஜனவரி மாதம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா சோட்டனஹள்ளி கிராமத்தில் உள்ள ஆதிநாட சிக்கம்மதாய் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் இருந்த பூசாரி சிக்கம்மதாய் அருள் வந்து சாமியாடினார். மேலும் யதீந்திராவுக்கு குறி சொன்னார்.

பூசாரி கூறியது என்ன?
அப்போது, ‛‛உனது தந்தை ஒரு தொகுதியில் போட்டியிட்டால் கெட்டது நடக்க வாய்ப்பு இருக்கிறது. 2 இடங்களில் போட்டியிடுவது தான் நல்லது. 2 தொகுதிகளில் போட்டியிட்டால் நான் நல்லது செய்வேன்'' என அருள்வந்து சாமியாடிய பூசாரி கூறினார். தற்போது சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆதரவாளர்கள் மறுப்பு
இருப்பினும் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் இதனை மறுத்துள்ளனர். இதுபற்றி அவர்கள், சித்தராமையா பூசாரியின் சொல் கேட்டு 2 தொகுதிகளில் போட்டியிட விரும்பவில்லை. மாறாக அரசியல் காரணங்களுக்காக 2 தொகுதிகளில் சித்தராமையா களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் வேறு எதுவும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சித்தாராமையாவுக்கு முதல்வர் வாய்ப்பு கிடைக்கலாம். இதனால் அவரை பாஜக, ஜேடிஎஸ் ஒன்றிணைந்து வீழ்த்த நினைக்கிறது. இதனால் 2 தொகுதிகளில் அவர் போட்டியிட விரும்புகிறார். அதோடு சித்தராமையாவும் மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரானவர் என்பதும், சொல்லப்போனால் அவர் பட்ஜெட் தாக்கல் உள்பட பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்த நல்ல நேரம் எதுவும் பார்க்கமாட்டார் என்றனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications