32 நர்சிங் மாணவிகளுக்கு கொரோனா.. கேரளா சென்று வந்தார்களாம்.. கல்லூரிக்கு சீல்.. கர்நாடகா ஷாக்
32 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஒரு கல்லூரியில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அத்தனை பேருக்கும் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.. இந்த மாணவர்களில் சிலர் சமீபத்தில்தான் கேரளாவுக்கு சென்று வந்ததும் தெரியவந்துள்ளதையடுத்து, அந்த கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கர்நாடகாவில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வரை தொற்று உச்சத்தில் இருந்தது.. இதையடுத்து, அந்த மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்ததன் அடிப்படையில் ஓரளவு பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் 1,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அம்மாநிலத்தில் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 49 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது... இப்போதைக்கு 18 ஆயிரத்து 386 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.. கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்... இதுவரை இந்த மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 318 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா
தற்போது ஓரளவு குறைந்து வருவதையடுத்து, அம்மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.. அதன்படி, செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் அறிவித்துள்ளார்.. எனவே, தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன.

மாணவர்கள்
இதுபோலவே கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன... ஆனால், கொரோனா விதிகளை பின்பற்றி, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது... அதாவது ஒரு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே பள்ளிகள் செயல்படுகிறது... மாணவர்களும் மாஸ்க் போட்டுக் கொண்டுதான் வருகிறார்கள்.. சமூக இடைவெளிகளை கிளாஸ் ரூம்களில் கடைப்பிடிக்கிறார்கள். அப்படித்தான் கோலாரில் உள்ள ஒரு கல்லூரியும் திறக்கப்பட்டது..

கேரளா
ஆனால், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அந்த கல்லூரியில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது... இந்த மாணவர்களில் சிலர் சில தினங்களுக்கு முன்பு கேரளாவுக்கு சென்று வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது... இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.. அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது...

நர்சிங் மாணவிகள்
இந்தியாவிலேயே கேரளாவில்தான் தொற்று அதிகமாக உள்ளது.. அப்படி இருக்கும்போது, கல்லூரி மாணவர்களை கேரளா செல்ல அனுமதித்த கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்துள்ளார்... அந்த நர்சிங் மாணவிகள் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நர்சிங் கல்லூரியை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் நேரில் பார்வையிடவும் உள்ளார்.

கேரளா
கேரளாவின் எல்லையில்தான், கர்நாடகாவின் கோலார் மாவட்டமும் உள்ளது.. கோலாரில் தினமும் நூற்றுக்கணக்கான கேரள மக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வந்து போவதுண்டு.. எனவே, கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலையும் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, கேரளாவில் இருந்து கர்நாடகா வரும் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடக சுகாதாரத்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications