பெங்களூரில் விடிய விடிய மழை.. 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் தகவல்
டெல்லி: அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல மாநிலங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று, இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான மழை விவசாய சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
பெங்களூரில் நேற்று இரவு முதல் காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. தமிழகத்தின் மேற்கு மண்டலத்திலும் மழையின் பரவல் இருந்தது.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்தியப் பிரதேசத்தில், சத்னா, பன்னா, தாமோ, சதர்பூர், ரேவா, டாடியா, குவாலியர், விதிஷா, சிங்க்ராலி, உமரியா, ஷாதோல் ஆகியவற்றில் இன்று லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் சுரு, ஆல்வார், ஜெய்ப்பூர் , பாரத்பூர் மற்றும் அருகாமை பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஹரியானா, பஞ்சாபில் புழுதி புயல் வீசக்கூடும். பீகார், ஜார்கண்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. உ.பி.யின், பிரயாகராஜ், வாரணாசி, ஜான்பூர், அசாம்கர், மிர்சாபூர் போன்ற பகுதிகளிலும், கயா, நவாடா , ஜமுய், பாங்கா, கொல்கத்தா மற்றும் அசன்சோல் உள்ளிட்ட பல நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரியை ஒட்டி இருக்கும்.
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஸ்கைமெட் கூறியுள்ளது, அதேசமயம் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி-என்.சி.ஆர், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் , மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் ஒடிசாவில் பகல் மற்றும் இரவு வெப்பநிலை அதிகரிக்கும்.
கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒடிசாவில் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும்.
இந்த ஆண்டு பருவமழை காலத்தில் நாட்டில், மிதமான அளவுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications