பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபையா? பாஜகவின் பரிசோதனை கூடமா? பெரும்பான்மை குறித்து சித்தராமையா ஆவேசம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா சட்டசபையை பாஜக பரிசோதனை கூடமாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாக கடுமையாக சாடியுள்ளார்.

105 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் இன்று 4-வது முறையாக எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்கிறார். ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Karnataka assembly become experimental lab for BJP, says Siddaramaiah

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் சித்தராமையா பதிவிட்டுள்ளதாவது:

கர்நாடகா சட்டசபையை பாஜக ஒரு பரிசோதனை கூடமாக மாற்றி வருகிறது. ஆளுநர் ஆதரவுடன் சட்டவிரோதமாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது பாஜக.

பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைக்க முடியும் என அரசியல் சாசனத்தின் எந்த பிரிவு சொல்கிறது? வெட்கக் கேடானது!

கர்நாடகா பாஜகவுக்கு மொத்தம் 105 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் இருக்கிறது. இது பெரும்பான்மைக்கும் குறைவான எண்ணிக்கை. அரசியல் சாசனப்படி நடந்து கொண்டால் பாஜக ஆட்சி அமைக்கவே முடியாது.

இதனால்தான் பாஜகவுக்கு ஜனநாயக விழுமியங்கள் மீது எந்த ஒரு மதிப்புமே இல்லை என கூறுகிறோம்.

இவ்வாறு சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

English summary
Former Karnataka Chief Minister Siddaramaiah called Karnataka an experimental lab for the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X