கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கை- பால், சிலிண்டர், அரிசி.. இலவசங்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசியது!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக இன்று தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு அரை லிட்டர் பால் இலவசம், 5 கிலோ அரிசி இலவசம், ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் என இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது பாஜக.

கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- பாஜக ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
- ஏழைகளுக்கு நாள்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்
- ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
- உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி நாட்களில் ஏழைகளுக்கு இலவச சிலிண்டர் வழங்குவோம்
- வீடுகள் இல்லாத 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்படும்
- எஸ்சி எஸ்டி பெண்களின் வங்கி கணக்கில் ரூ10,000 டெபாசிட் செலுத்தி கூடுதலாக ரூ10,000 வழங்கப்படும்
- வயதானவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச உடல்பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும்
- வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்
- சூரிய ஒளி பம்பு செட் அமைப்பவர்களுக்கு 80% மானியம் வழங்கப்படும்.
- அனைத்து வார்டுகளிலும் அனைத்து வசதிகளுடனுனான கிளினிக்குகள் ஏற்படுத்தப்படும்
- குறைந்த விலையிலான உணவு வழங்க அடல் உணவகங்கள் உருவாக்கப்படும்
More From
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications