கர்நாடகா சட்டசபை தேர்தல்: 140 வேட்பாளர்களுடன் பாஜக முதல் பட்டியல் இன்று இரவு வெளியாகிறது?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 140 வேட்பாளர்களுடனான முதல் பட்டியலை பாஜக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
224 எம்.எல்.ஏக்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபை தொகுதிக்கு மே 10-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது; மே 13-ந் தேதி வாகு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் ஜேடிஎஸ், காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 166 வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பாஜக தரப்பில் ஒரு வேட்பாளர்கள் பட்டியல் கூட வெளியாகவில்லை. ஆனால் ஏற்கனவே போலி வேட்பாளர் பட்டியல் ஒன்று வெளியாகி பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்தது.
டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தலைமையிலான குழு, கர்நாடகா பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வருகிறது.
இந்தப் பட்டியலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மன்றக் குழு இன்று ஒப்புதல் வழங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு அல்லது நாளை காலை பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
கர்நாடகா பாஜகவில் தலைவர்களின் வாரிசுகள் பலரும் சீட் கேட்டு முட்டி மோதுகின்றனர். ஆனால் கட்சி மேலிடமோ வாரிசுகளை ஊக்கப்படுத்துவதா? என்பதில் குழப்பத்தில் இருக்கிறது. அப்படி வாரிசுகளுக்க் சீட் தராமல் போனால் தலைவர்களே அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை ஆதரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஏற்கனவே பல்வேறு கருத்து கணிப்புகளும் கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறி வருகின்றன. இன்னொரு பக்கம் தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் இருப்பதாகவும் கூறுகின்றன. இவற்றின் பின்னணியில் கர்நாடகா பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications