நாளை ரிசல்ட்.. கர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் தாமரை? பாஜகவால் பீதியில் உறைந்த காங்கிரஸ்! பலே பிளான்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ரிசல்ட் நாளை வெளியாக உள்ள நிலையில் தொங்குசட்டசபை அமைந்தால் பாஜகவினர் ‛ஆபரேஷன் தாமரை' மூலம் எம்எல்ஏக்களை இழுத்து விடுவார்களோ என காங்கிரஸ் கட்சி பயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பாஜகவிடம் இருந்து எம்எல்ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி முக்கிய திட்டத்தை வகுத்துள்ள விபரம் வெளியாகி உள்ளது.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் யாருடன் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்பது பற்றியும், ஜேடிஎஸ் கட்சி சார்பில் விதிக்கப்படும் நிபந்தனைகள் பற்றிய பரபரப்பான அதேநேரத்தில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 72.67 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. நாளை காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது. நாளை மதியத்துக்கு மேல் கர்நாடகாவில் ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்ற விபரம் தெரிந்துவிடும்.
தற்போதைய சூழலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தாங்கள் தான் தேர்தலில் வெற்றி பெறுவோம் என பேசி வருகின்றனர். மெஜாரிட்டிக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அதனை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ், பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க ஜேடிஎஸ் தலைவர்களோ கர்நாடகாவில் தொங்குசட்டசபை தான் அமையும். நாங்கள் தான் கிங்மேக்கராக மாறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளன. இதுபற்றி ஜேடிஎஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி கூறுகையில், ‛‛மாநிலத்தில் 50 தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சி வெற்றி பெறும். நாங்கள் கிங்மேக்கராக மாறுவோம்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொங்க சட்டசபை வாய்ப்பு: இதற்கிடையே தான் நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டது. இதில் இந்தியா டுடே மட்டும் தான் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்தது. மாறாக பெரும்பலானா கருத்து கணிப்புகள் தொங்குசட்டசபை தான் உருவாகும் எனவும், காங்கிரஸ் 90 முதல் 110 இடங்கள் வரையும், பாஜக 80 முதல் 90 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 20 முதல் 30 இடங்களிலும் வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளன. சில கருத்து கணிப்புகளில் பாஜக அதிகபட்சமாக 80 இடங்களில் தான் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

‛ஆபரேஷன் தாமரை' அச்சம்: இதனால் தான் தொங்கு சட்டசபை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தனிபெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு இன்னொரு அச்சம் எழுந்துள்ளது. அதாவது தேர்தலில் ஒருவேளை தொங்குசட்டசபை அமைந்து, பாஜக 90 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றினால் நிச்சயம் ஜேடிஎஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியை தக்கவைக்க துடிக்கும். இல்லாவிட்டால் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ‛ஆபரேஷன் தாமரை' மூலம் இழுக்க முயற்சி செய்யலாம் என காங்கிரஸ் நினைக்கிறது.
காங்கிரஸ் ஆலோசனை: இதனால் நாளை தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் வேட்பாளர்களை எப்படி பாதுகாப்பது? தொங்கு சட்டசபை அமைந்தால் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பது எப்படி? என்பது பற்றி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கர்நாடகா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் உள்பட மூத்த தலைவர்கள் இதுபற்றி தீவிரமாக ஆலோசித்துள்ளனர். இன்று இரவும் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
திட்டம் என்ன தெரியுமா: அதன்படி அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களையும் ஜூம் மீட்டிங்கில் அழைத்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நாளை ரிசல்ட் வந்தவுடன் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மொத்தமாக காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் வைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களை பாஜகவினர் தொடர்பு கொள்ள முடியாதபடி உடனடியாக அவர்களை காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு நடந்தது என்ன: ஏனென்றால் கடந்த 2018 தேர்தலில் மாநிலத்தில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. இந்த கூட்டணி ஆட்சி ஓராண்டு நடந்த நிலையில் பகாங்கிரஸ்,ஜேடிஎஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் 15க்கும் அதிகமானவர்கள் பாஜகவிடம் திடீரென்று சேர்ந்தனர். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியை பிடித்தது. அதுபோன்ற சம்பவம் இந்த முறை நடக்க கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதால் ரிசல்ட்டுக்கு முன்பே கட்சி தலைவர்கள் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications