Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரை ‛ஸ்வீப்’ செய்யும் காங்கிரஸ்.. பாஜக, ஜேடிஎஸ்க்கு பெரியஅடி! டிவி 9 -சிவோட்டர் சர்வே ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் மேற்கொண்ட சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி பெங்களூரில் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ‛ஸ்வீப்' செய்யும் எனவும், பாஜக, ஜேடிஎஸ் கட்சிக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2018 ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. எம்எல்ஏக்களின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இதனால் அதற்கு முன்பாக கர்நாடகாவுக்கு சட்டசபை தேர்தல் நடத்த தேதி குறிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போது அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வீதி வீதியாக தலைவர்கள் பேரணி சென்றும், பொதுக்கூட்டங்களில் பேசியும் ஆதரவு கோரி வருகின்றனர்.

இதற்கிடையே கர்நாடகாவில் தேர்தலுக்கு முந்தைய பல கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் ரிசல்ட் வெளியிடப்பட்டன. இந்த கருத்து கணிப்பில் பெங்களூர் மற்றும் பெங்களூர் புறநகர் மாவட்டங்களை குறிக்கும் பெங்களூர் மண்டலத்தில் காங்கிரஸ் கட்சி தான் ஸ்வீப் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karnataka Assembly Election: Congress seen ahead of BJP and JDS in Bangalore region, Says TV 9-C Voter Survey

பெங்களூர் நகரில் 28 சட்டசபை தொகுதிகளும், பெங்களூர் புறநகரில் 3 சட்டசபை தொகுதிகள் என மொத்தம் பெங்களூர் மண்டலத்தில் 31 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. அதன்படி பெங்களூரில் காங்கிரஸ் கட்சிக்கு 41.7 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் எனவும், 18 முதல் 22 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக தற்போது கர்நாடகாவை ஆட்சி செய்யும் பாஜகவுக்கு பெங்களூர் மண்டலத்தில் 34.8 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் பாஜக குறைந்தது 7 தொகுதியையும், அதிகபட்சமாக 11 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என கருத்து கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. இதுதவிர ஜேடிஎஸ் கட்சி 18 சதவீத ஓட்டுகளுடன் 1 தொகுதியிலும், மற்றவர்கள் 8.5 சதவீத ஓட்டுகளுடன் ஒரு இடத்திலும் வெற்றி பெறலாம் என டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த 2018 தேர்தலை காட்டிலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் பெங்களூர் மண்டலத்தில் ஸ்வீப் செய்யலாம் என்பது உறுதியாகி உள்ளது. அதோடு முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது பெங்களூர் மண்டலத்தில் பாஜக, ஜேடிஎஸ் கட்சிக்கு குறைந்த இடங்கள் கிடைக்கலாம் என்பதை இந்த கருத்து கணிப்பு உணர்த்தி உள்ளது.

Karnataka Assembly Election: Congress seen ahead of BJP and JDS in Bangalore region, Says TV 9-C Voter Survey

அதேபோல் ஒட்டுமொத்த கர்நாடகாவை எடுத்து கொண்டால் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியை தொட வாய்ப்புள்ளதாகவும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதாவது மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 106 முதல் 116 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 இடங்கள் போதுமானது என்ற நிலையில் கூடுதலாக 3 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி மெஜாரிட்டியை தாண்டலாம் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. மாறாக இந்த தேர்தலில் பாஜகவுக்கு 79 முதல் 89 தொகுதிகளும், ஜேடிஎஸ் கட்சிக்கு 24 முதல் 34 தொகுதிகளும், மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் 5 தொகுதிகள் வரையும் வெற்றி பெறலாம் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+