Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக பாஜகவில் பெரும் களேபரம்! வெடித்து கிளம்பிய லிங்காயத்து லீடர், மாஜி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக அரசியலின் மூத்த தலைவரான முன்னாள் முதல்வரும், லிங்காயத்து சமூகத்தின் முக்கிய பிரமுகருமான ஜெகதீஷ் ஷெட்டர் கட்சி மேலிட உத்தரவையும் மீறி தான் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்து இருப்பது பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் வரும் மே 7 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அங்கு தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது.

Karndaka Assembly election: First major rebellion happens after former CM Jagadish Shettar defied BJP high command

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் ஒரே தென் மாநிலம் கர்நாடகாதான். எனவே கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதனால், வேட்பாளர் தேர்விலும் பாஜக மேலிடம் மிகுந்த கவனமாக உள்ளது.

பாஜக மேலிடம் கூறியதால்:டெல்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கிவிடுவார்; அதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை காலை பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் தகவல்கள் வெளியாகின. ஆனால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.

Karndaka Assembly election: First major rebellion happens after former CM Jagadish Shettar defied BJP high command

தேர்தலில் சீட் கொடுப்பதில் பாஜக மேலிடம் கறார் காட்டுவதாகவும் ஒவ்வொரு தொகுதியையும் ஆய்வு செய்து வெற்றி வாய்ப்புள்ளவர்களை நிறுத்த வேண்டும் என்று தீர்க்கமாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநில பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈஸ்வரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று திடீரென அறிவித்தார்.

நான் சுயவிருப்பத்தின்பேரில் தேர்தல் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். அதனால் இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட எனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று ஜேபி நட்டாவிற்கு கடிதம் அனுப்பினார். சட்டசபை தேர்தலில் தன்னுடன் தனது மகனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஈஸ்வரப்பா வலியுறுத்தி வந்தார். ஆனால் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் பாஜக மேலிடம் கூறியதால் ஈஸ்வரப்பா இந்த முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

சீட் கிடைக்கும் என்று நினைத்து: கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈசுவரப்பாவின் இந்த அறிவிப்பு பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கட்சி மேலிடம் விருப்பத்திற்கு மாறாக தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

Karndaka Assembly election: First major rebellion happens after former CM Jagadish Shettar defied BJP high command

இது தொடர்பாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு சீட் கிடைக்கும் என்று நினைத்து நான் எனது தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். ஆனால் நேற்று கட்சி மேலிட தலைவர்கள் என்னை தொலபேசியில் தொடர்பு கொண்டு புதியவர்களுக்கு வழிவிடுங்கள் என்று கூறினர். திடீரென தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ளுமாறு கூறியது எனக்கு வேதனையை கொடுத்துள்ளது.

எனக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளேன். நான் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. பாஜகவில் ஜனதாவில் மூத்த தலைவர்களுக்கு உரிய கவுரவம் கொடுக்க வேண்டும். நான் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். இன்னும் 10 ஆண்டுகள் காலம் கட்சி பணியாற்ற எனக்கு வயது உள்ளது. இதை கட்சி மேலிட தலைவர்கள் பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+