'குண்டூர் உன்னது காக்கிநாடா என்னது'- கர்நாடகாவில் மண்டலங்களில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் இதுதான்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் கடலோர கர்நாடகா மண்டலத்தில்தான் பாஜகவின் காவி கொடி பட்டொளி வீசி பறக்கிறது. அப்பகுதியில் மொத்தம் உள்ள 19 தொகுதிகளில் 16-ல் பாஜக வெற்றி கொடி நாட்டி உள்ளது.
கர்நாடகா அரசியலைப் பொறுத்தவரை எப்போதும் 6 மண்டலங்களாகப் பிரித்து பேசப்படுவது வழக்கம். கர்நாடகா தேர்தல்களிலும் இந்த மண்டல வாரியான வாக்குகள் குறித்து ஆராயப்படுவதும் உண்டு.

அதாவது கர்நாடகா மாநிலமானது பெங்களூரு, மத்திய கர்நாடகா, கடலோர கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகா, மும்பை கர்நாடகா மற்றும் பழைய மைசூரு மண்டலங்களாக கருதப்படுகின்றன.
தற்போதைய தேர்தலில் இந்த 6 மண்டலங்களில் காங்கிரஸ் கட்சியானது 5 மண்டலங்களில் 50% வாக்குகளை அள்ளியிருக்கிறது.
பெங்களூரு மண்டலத்தில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 13 தொகுதிகளையும் காங்கிரஸ் 13 தொகுதிகளையும் கைப்பற்றியது.
மத்திய கர்நாடகாவில் மொத்தம் 23 தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் 15; பாஜக 6, மஜத 1 இடங்களைக் கைப்பற்றியது.
கடலோர கர்நாடகாவில் மொத்தம் 19 தொகுதிகள்; இதில் பாஜக 13 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும்தான் பெற முடிந்தது.
ஹைதராபாத் கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 26, பாஜக 10, மஜத 3 , கேஆர்பிபி1 -ல் வென்றுள்ளன.
மும்பை கர்நாடகாவில் மொத்தம் 50 தொகுதிகள் இடம்பெறுகின்றன. இவற்றில் காங்கிரஸ் 33 இடங்களைக் கைப்பற்றி அமோக சரித்திரம் படைத்துள்ளது. பாஜக 16 இடங்களையும் மஜத 1 இடத்தையும் பெற்றிருக்கிறது.
பழைய மைசூரு மண்டலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ், மஜதா சரிசமமாகப் பங்கிடக் கூடியதாக இருந்து வந்தது. இங்கு மொத்தம் 64 தொகுதிகள் உள்ளன. ஆனால் இத்தேர்தலில் நிலைமை தலைகீழாகிவிட்டது.
மொத்தம் 64 தொகுதிகளில் காங்கிரஸ் மட்டுமே 43 தொகுதிகளை அள்ளியது. மஜத 14 இடங்களிலும் பாஜக 5 இடங்களிலும்தான் வென்றது. மஜதவின் கோட்டையான பழைய மைசூரு இப்போது காங்கிரஸ் வசமானது. இங்கு எஸ்கேபி 1, சுயேட்சை 1 இடத்திலும் வென்றுள்ளனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications