59 தொகுதி.. மோடியால் கூட முடியல! ஓல்டு மைசூரில் வாடிய தாமரை.. ஜேடிஎஸ் கோட்டையை தகர்த்த காங்கிரஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக ஓல்டு மைசூர் (பழைய மைசூர்) மாவட்டங்களில் 59 தொகுதிகள் உள்ள நிலையில் இங்கு பிரதமர் மோடி ஸ்பெஷல் கவனம் செலுத்தி பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் பாஜகவுக்கு இந்த மாவட்டங்களில் பெரிய அடி விழுந்துள்ளதோடு, மோடியின் பிரசாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையான இந்த மாவட்டங்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றி அசத்தி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. மாநிலத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் உருவாகும் என கருத்து கணிப்புகள் கூறின. அதாவது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தனித்து ஆட்சியை பிடிக்க தேவையான 113 இடங்களில் வெற்றி கிடைக்காது என பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.

இருப்பினும் கூட கருத்து கணிப்புகள் அனைத்து தேர்தல்களிலும் பலித்தது இல்லை. எங்களுக்கு கருத்து கணிப்புகள் மீது நம்பிக்கையும் இல்லை. நாங்கள் நிச்சயம் கர்நாடகாவில் 113க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிப்போம் என பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இந்த தேர்தலை எதிர்கொள்ளும் முன்பு ஆளும் கட்சியான பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்தது. ஊழல், முறைகேடு புகார்களுடன், அரசு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளும் ஒப்பந்தாரர்களிடம் 40 சதவீதம் வரை கமிஷன் பெறுவதாக குற்றம்சாட்டியது. இது பெரிய அளவில் ரீச் ஆனது. இதனால் முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு சிக்கலை சந்தித்தது.
இந்நிலையில் தான் பாஜக பிரசார வியூகத்தை மாத்தியது. அதாவது கர்நாடகாவில் உள்ள மாவட்டங்கள் 6 பிரிவுகளாக உள்ளன. இதில் கடலோர கர்நாடகா மத்திய கர்நாடகா, மும்பை கர்நாடகா மாவட்டங்களில் பாஜக பலமாக உள்ளது. மாறாக பெங்களூர், ஹைதராபாத்-கர்நாடகா பிரிவுகளிலும் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. மாறாக பழைய மைசூர் மாவட்டங்களில் பகுதிகளில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. இது ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாகும். அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான சீட்கள் இங்கு கிடைக்கும்.
சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், ஹாசன், கோலார், துமகூரு, மண்டியா, மைசூரு, ராமநகர், குடகு உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கியது தான் இந்த பழைய மைசூர் பகுதியாகும். மொத்தம் 59 சட்டசபை தொகுதிகள் உள்ள இந்த பழைய மைசூரில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. ஏனென்றால் இங்கு ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஓட்டு வங்கியாக இருக்கும் ஒக்கலிகர் சமுதாயத்தினர் தான் அதிகம் உள்ளனர்.
ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். பாஜகவில் லிங்காயத் சமுதாயத்தினருக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படும் என்பதால் இந்த 10 மாவட்டங்களில் அந்த கட்சி 11 தொகுதிகளை தாண்டி ஒருபோதும் ஜெயித்ததே இல்லை. இந்நிலையில் தான் பழைய மைசூர் மாவட்டங்களில் பாஜக காலூன்ற போராடி வருகிறது.
இந்த தேர்தலில் கர்நாடகாவின் பிற பகுதிகளை காட்டிலும் பழைய மைசூர் மாவட்டங்களில் பாஜக அதிக கவனம் செலுத்தியது. இதற்கு முக்கிய காரணம் ஒக்கலிகர் ஓட்டுகளை ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறிக்க வேண்டும் என்பது தான். மேலும் அரசு மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் பிற இடங்களில் வெற்றி வாய்ப்பை பாதிக்கும்பட்சத்தில் பழைய மைசூரில் அதிக கவனம் செலுத்தினால் அங்கு சில தொகுதிகளை கைப்பற்றலாம் என பாஜக வியூகம் வகுத்தது.
அதோடு இங்கு மட்டும் தான் ஜேடிஎஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த பகுதியை வைத்து கொண்டே அந்த கட்சி அதிகபட்சமாக 58 தொகுதிகள் வரை வென்று காட்டியுள்ளது. கடந்த முறை மாநிலத்தில் ஜேடிஎஸ் 37 தொகுதிகளை பிடித்தது. இதனால் இந்த பகுதியில் மட்டும் பாஜகவின் செல்வாக்கை வளர்த்தால் கர்நாடகாவில் அசைக்க முடியாத சக்தியாக மாறிவிடலாம் என அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி தான் மண்டியா சுயேச்சை எம்பி சுமலதா பாஜக தனக்கு ஆதரவாக இழுத்தது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்கள் இந்த பகுதிகளில் மட்டும் 10க்கும் அதிகமான பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தினார். சொல்லப்போனால் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர்-மைசூர் 10 வழி நெடுஞ்சாலை திட்டத்தை மண்டியாவில் தான் தொடங்கி வைத்து தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பிரதமர் மோடி பிரசாரத்தை ஆரம்பித்தார்.
மேலும் இங்கு பாஜக தனது இந்துத்துவா கொள்கையை கையில் எடுத்து பிரசாரம் செய்தது. இதன் ஒருபகுதியாக தான் ராமநகர் மாவட்டத்தில் குட்டி அயோத்தி அமைக்கப்படுவதாக பாஜக அறிவித்து அதற்கான வரைபடத்தை தேர்தலுக்கு முன்பு வெளியிட்டது. அதோடு காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் கர்நாடகாவை ஏடிஎம் இயந்திரமாக தான் பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் பி டீமாக தான் ஜேடிஎஸ் உள்ளது என பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி மட்டும் 5க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களில் பேசினார். மேலும் ரோட்சோ நடத்தினார். அதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களும் இங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் தான் பாஜகவுக்கு அதிக இடங்களில் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர்.
அதோடு இந்த பழைய மைசூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாஜகவுக்கு கைக்கொடுக்கும் பட்சத்தில் அது அந்த கட்சிக்கு பெரிய பூஸ்டாக இருக்கும். ஏனென்றால் கடந்த ஓராண்டுகளாக பழைய மைசூர் மாவட்டங்களை குறிவைத்த பாஜக களப்பணி ஆற்றி வந்தது. இருப்பினும் பாஜகவை இங்கு காலூன்ற விடக்கூடாது என ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்தனர். இந்நிலையில் தான் நேற்று தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகின.
இதில் ஓல்டு மைசூரில் உள்ள 62 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வென்று அசத்தியது. குறிப்பாக ஓல்டு மைசூர் மாவட்டங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுராவிலும், எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியிலும், முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
கடந்த முறை 29 தொகுதிகளில் வென்ற ஜேடிஎஸ் கட்சி வெறும் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னபட்டணா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது மகன் நிகில் கவுடா ராமநகர் தொகுதியில் தோல்வியடைந்தார். குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா தொகுதியில் வெற்றி பெற்றார். இருப்பினும் ஜேடிஎஸ் கட்சி பல தொகுதிகளை காங்கிரஸ் கட்சிடம் பறிகொடுத்துள்ளது.
அதோடு பாஜக கடந்த முறை 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது அந்த 6 தொகுதிகளில் மட்டுமே பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக கூற வேண்டும் என்றால் பல அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். சித்தராமையாவை எதிர்த்து வருணா மற்றும் 2வது தொகுதியாக சாம்ராஜ்நகரில் போட்டியிட்ட அமைச்சர் சோமண்ணா 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். இன்னொரு அமைச்சரான நராயணகவுடா மைசூர் மாவட்டம் கேஆர் பேட்டை தொகுதியிலும், அமைச்சர் சுதாகர் சிக்கபள்ளாப்பூர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர். இதன்மூலம் ஓல்டு மைசூர் மாவட்டங்களில் பாஜகவை காலூன்ற செய்ய பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் எடுத்த முயற்சிகள் படுதோல்வியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications