9 டூ 6.. உள்ளதும் போச்சே.. எடுபடாத பிரதமர் மோடி பிரசாரம்.. ஓல்டு மைசூர் மாவட்டங்களில் பாஜக படுதோல்வி
பெங்களூர்: கர்நாடகாவில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தபால் ஓட்டில் இருந்தே ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையான ஓல்டு மைசூர் மாவட்டங்களில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்த்தது. இறுதியில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இங்கு பாஜகவை வளர்க்க பிரதமர் மோடி ஸ்பெஷல் நடவடிக்கை எடுத்த நிலையில் அவருக்கு ஓல்டு மைசூர் மக்கள் செவி சாய்க்கவில்லை.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் தான் ஓல்டு மைசூர் மாவட்டங்களில் பாஜக கடும் பின்னடைவை சந்திக்க தொடங்கியது.

சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், ஹாசன், கோலார், துமகூரு, மண்டியா, மைசூரு, ராமநகர், குடகு உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கியது தான் இந்த ஓல்டு மைசூர் பகுதியாகும். மொத்தம் 59 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஓல்டு மைசூர் என்பது ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாகும்.
இதற்கு முக்கிய காரணம் ஜேடிஎஸ் கட்சியின் தேவேகவுடா அவரது மகன் குமாரசாமி ஆகியோர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சிக்கு அந்த சமுதாய மக்கள் ஆதரவாக உள்ளனர். பாஜகவுக்கு ஒக்கலிகர் ஓட்டுகள் கிடைப்பது அரிதானது தான். இந்நிலையில் தான் ஓல்டு மைசூர் மாவட்டங்களில் பாஜக காலுன்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தினார். அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் மோடி 5க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களில் பேசினார். மேலும் ரோட்சோநடத்தினார். அதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களும் இங்கு முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் தான் இன்று காலையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அப்போது ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தான் ஓல்டு மைசூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முன்னிலை பெற்றனர். மாறாக பாஜகவினர் கடும் பின்னடைவை சந்தித்தனர். அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் பாஜக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து படுதோல்வியடைந்தது.
பழைய மைசூர் மாவட்டங்களில் 59 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக கடந்த முறை 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் 3 தொகுதிகளை இழந்துள்ளது. மேலும் பல அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். சித்தராமையாவை எதிர்த்து வருணா மற்றும் 2வது தொகுதியாக சாம்ராஜ்நகரில் போட்டியிட்ட அமைச்சர் சோமண்ணா 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். இன்னொரு அமைச்சரான நராயணகவுடா மைசூர் மாவட்டம் கேஆர் பேட்டை தொகுதியிலும், அமைச்சர் சுதாகர் சிக்கபள்ளாப்பூர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர்.

இதன்மூலம் பிரதமர் மோடி, ஜேபி நட்டா, அமித்ஷா ஆகியோர் தங்களால் முடிந்த வரை ஓல்டு மைசூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு ஓக்கலிகர் வாக்குகளை கவர முயன்றனர். ஆனால் தற்போதைய நிலவரம் என்பது பாஜகவுக்கு பெரிய அடியாக விழுந்துள்ளது. மாறாக ஓல்டு மைசூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. கடந்த முறை 29 தொகுதிகளில் வென்ற ஜேடிஎஸ் கட்சி வெறும் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி பல தொகுதிகளை காங்கிரஸ் கட்சிடம் பறிகொடுத்து தனது செல்வாக்கான பகுதியில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
****
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications