கர்நாடகாவில் ஜெயிப்பது அனுமனா? காஸ் சிலிண்டரா? பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் அஸ்திவாரம் ஆடுதே! ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இந்நிலையில் தான் அஸ்திவாரத்தை அசைத்து பார்த்த பாஜகவின் அனுமன் யுக்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் சமையல் எரிவாயு சிலிண்டர் யுக்தி ஆகியவற்றில் எது வெற்றி பெறும் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் மே 24ல் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 73 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கருத்து கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் பாஜகவின் அனுமன் யுக்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் காஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பான யுக்தியில் எது மக்கள் மத்தியில் பிரபலமானது. இரண்டு கட்சிகளில் எந்த பிரசாரம் மக்களிடம் எடுபட்டது என்பதற்கு இன்று விடை கிடைத்து விடும். அதாவது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலில் இருகட்சி தலைவர்களும் வெவ்வேறு அம்சங்களை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர்களின் ஓட்டுகளை தன்வசப்படுத்த தேர்தல் அறிக்கையில் அனுமன் பக்தர்களின் பஜ்ரங்தளம் அமைப்பை தடை செய்வதாக அறிவித்தது. கர்நாடகாவில் மசூதியில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு இந்த அமைப்பு தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு பாஜக, பஜ்ரங்தளம் உள்பட பிற இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பாஜக பெரிய அளவில் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்தது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்களான அமித்ஷா உள்பட பலரும் காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என விமர்சனம் செய்தனர். உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தடையாக இருந்த காங்கிரஸ் கர்நாடகாவில் அனுமன் பக்தர்களின் பஜ்ரங்தளத்தை தடை செய்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என தலைவர்கள் பேசினர்.
பிரதமர் மோடி தனது பிரசார மேடைகளில் ‛பஜ்ரங்பலி' என்ற கோஷத்தை முன்வைத்தார். மேலும் பிரதமர் மோடியின் ஊர்வலங்களில் அனுமன் முகமூடி அணிந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதனால் பயந்துபோன காங்கிரஸ் தலைவர்கள் டிகே சிவக்குமார், வீரப்பமொய்லி உள்ளிட்டவர்கள் பஜ்ரங்தள அமைப்பை காங்கிரஸ் தடை செய்யாது. மாநிலத்தில் அனுமன் கோவில்கள் கட்டப்படும் என அந்தர்பல்டி அடித்தனர்.
மேலும் பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்க விரும்பிய காங்கிரஸ், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ‛தாமரை' கட்சிக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்தது. சிலிண்டர் விலையை குறைப்பதாக கூறிய பாஜக, அதனை செய்வில்லை. மாறாக ஆண்டுதோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உச்சம் தொட்டு தற்போது ரூ.1000யை கடந்து உள்ளது என மாநிலம் முழுவதும் பிரசாரத்தை செய்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் சிலிண்டருக்கு பூஜை செய்து எதிர்ப்பை காட்டினார். மேலும் ஓட்டுப்பதிவுக்கு முன்பாக பொதுமக்கள் அனைவரும் சிலிண்டருக்கு பூஜை செய்து கும்பிட்டு வந்து வாக்களிக்க வேண்டும் என கூறினார். அதன்படி 10ம் தேதி நிறைய பேர் பொது இடங்களில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பூஜை செய்து ஓட்டளித்தனர். இது பாஜகவை கலங்கடித்தது.
இவ்வாறு பாஜக பஜ்ரங்தள அமைப்பு தடைக்கு விதிப்பதாக கூறியதை காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சி பாஜக தான் சிலிண்டர் விலை உயர்த்தியதாகவும் கூறியும் தீவிர பிரசாரம் செய்தனர். இந்த 2 பிரசாரத்துக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இந்நிலையில் தான் இருபிரசாரங்களில் எந்த பிரசாரம் வெற்றி பெறும். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளில் எது வெற்றி பெறும் என்பது இன்றைய தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications