கோட்டை போனதோ! கொத்தளம் போனதோ! கவுடாக்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் மஜதவுக்கு குட்பை சொல்லிவிட்டார்களே!
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஒக்கலிகா கவுடாக்களைப் போல முஸ்லிம்களும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு இம்முறை பெருமளவு வாக்குகளை அளிக்காமல் போயிருப்பது அக்கட்சித் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடகா தேர்தல்களில் மஜதவுக்கு நம்பிக்கை ஆதாரமாக இருப்பவையே ஒக்கலிகா கவுடாக்கள் வாக்குகளும் இஸ்லாமியர் வாக்குகளும்தான். பழைய மைசூரு மண்டலத்தில் இந்த இரு பெரும் சமூகங்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் லாவகமாக அறுவடை செய்து வந்தது மஜத. ஆனால் இம்முறை அப்படியே சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்டுவிட்டன இந்த இரு சமூகங்கள்- குறிப்பாக இஸ்லாமியர்கள்.

இதனால் இம்முறை மஜத நிறுத்திய ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. 2008-ம் ஆண்டுக்குப் பின் கடந்த 15 ஆண்டுகளில் மஜத ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ.வை கூட பெற முடியாத நிலையை இத்தேர்தல் முடிவுகள் உருவாக்கி கொடுத்துவிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்களில் 9 பேர் வென்றுவிட்டனர். மஜத மொத்தம் 22 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. ஒருவர் கூட வெல்லவில்லை.
2018-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபையில் 7 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இவர்களில் 5 பேர் காங்கிரஸ், 2 பேர் மஜத. அத்தேர்தலில் மொத்தம் 25 முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் 17 முஸ்லிம்களையும் மஜத 8 முஸ்லிம்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியது. பாஜகவைப் பொறுத்தவரை 2018, 2023 தேர்தல்களில் ஒரு இஸ்லாமியாரை கூட வேட்பாளராக நிறுத்தியதும் இல்லை.
இத்தேர்தலைப் பொறுத்தவரை மஜத, தேர்தலுக்குப் பின் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடிய சாத்தியங்களை அத்தலைவர்களை வெளிப்படுத்தி வந்தனர். ஏற்கனவே பாஜக அரசின் மத மாற்ற தடை சட்டம், 4% இடஒதுக்கீடு பறிப்பு உள்ளிட்டவைகளால் கொந்தளித்துக் கொண்ட முஸ்லிம் வாக்காளர்கள் மொத்தமாக காங்கிரஸின் கை சின்னத்துக்கு வாக்குகளை கொட்டித் தீர்த்துவிட்டனர். பழைய மைசூரு என்றுதான் இல்லை.. கடலோர கர்நாடகாவிலும் இதே நிலைமைதான். இம்முறை மஜதவை முஸ்லிம்கள் நம்பி ஏமாறத் தயாராக இல்லை என்பதை அறிவித்துவிட்டனர். அதனால் மஜதவின் அரசியல் எதிர்காலமும் கூட பெரும் கேள்விக்குறியாகிவிட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications