என்னாது.. பாஜக - காங்கிரஸ் வாக்கு வித்தியாசம் இவ்ளோதானா.. முழு டேட்டா இதோ.. மஜத நிலையை பாருங்க!

கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. கர்நாடகாவில் தொங்கு சட்ட சபைக்கு வாய்ப்பு என்று பெரும்பாலான கணிப்புகள் கூறிய நிலையில், அதையெல்லாம் தவிடு பொடியாக்கி காங்கிரஸ் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றியை பெற்றிருக்கிறது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்த மேஜிக் எண்ணை காங்கிரஸ் எளிதாக தாண்டிவிட்டது. பாரதிய ஜனதா 65 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி வேகம் காட்ட தொடங்கி விட்டது.
இதனிடையே கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதங்கள் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சி 42.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 36 சதவிகிதமாக உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 13.3 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 0.58 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. பி.எஸ்.பி கட்சி 0.31 சதவீத வாக்குகளும் ஓவைசி கட்சி 0.02 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் போட்டியிட்ட்டு இருந்தனர்.
மொத்தமாக 2,430 ஆண்களும், 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் களம் கண்டனர். தேர்தலின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. தேர்தலில் 70 ஆயிரத்து 300 வாக்குப்பதிவு எந்திரங்களும், 76 ஆயிரத்து 202 வி.வி.பேட்பயன்படுத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications