கர்நாடகா சட்டசபையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கட்டாய மதமாற்றத் தடை சட்ட மசோதா நிறைவேற்றம்!
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது கட்டாய மதமாற்றம் செயலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்; மேலும் ரூ25 ஆயிரம் பராதம் விதிக்கப்படும்; சிறுவர்கள், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை; ரூ50 ஆயிரம் அபராதமும் விதிக்க வகை செய்கிறது இம்மசோதா.
பாஜக ஆட்சி செய்யும் குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் உள்ளது. கர்நாடகா மாநிலத்திலும் இச்சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.
இச்சட்டத்துக்கு காங்கிரஸ், சிறுபான்மை நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெங்களூருவில் 40க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து பிரமாண்ட பேரணியையும் இச்சட்டத்துக்கு எதிராக நடத்தி இருந்தனர்.

சட்டசபையில் நிறைவேற்றம்
ஆனாலும் பெலகாவியில் நடைபெற்று வரும் கர்நாடகா சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரில் கட்டாய மதமாற்றத் தடை சட்ட மசோதாவானது, கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று சட்டசபையில் காங்கிரஸ் கட்சி இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தது. இருந்தபோதும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

சலுகைகள் இழப்பு
இம்மசோதாவில், மதம்மாற விரும்புகிறவர்கள் மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் 2 மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்; மதம் மாறினால் ஜாதிய அடிப்படையிலான அனைத்து இடஒதுக்கீடு சலுகைகளும் கிடைக்காது. எந்த மதத்தில் சேருகிறாரோ அந்த மதம்சார்ந்த சலுகைகளை மட்டுமே பெற முடியும்.

என்ன தண்டனைகள்?
கட்டாய மதமாற்றம் செயலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்; மேலும் ரூ25 ஆயிரம் பராதம் விதிக்கப்படும்; சிறுவர்கள், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ50 ஆயிரம் அபராதமும் விதிக்க வகை செய்கிறது இம்மசோதா.

10 ஆண்டுகள் சிறை
திருமணத்துக்காக கட்டாயமாக மதம் மாற்றம் செய்தால் அந்த திருமணங்கள் செல்லாது; கட்டாய மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; மதமாற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அதாவது கூட்டாக மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். உ.பி, ம.பி., குஜராத் மாநில கட்டாய மதமாற்ற தடை சட்டங்களிலும் இத்தகைய அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.












Click it and Unblock the Notifications