நாளை கர்நாடகா பந்த்.. பஸ் – ஆட்டோ டூ பள்ளி – கல்லூரி வரை.. பெங்களூரில் எவை இயங்கும்? எது இயங்காது?
பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை கர்நாடகாவில் பந்த் நடத்தப்படுகிறது. இந்த பந்த் போராட்டத்தில் பஸ், ஆட்டோக்கள் இயங்குமா? பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் செயல்படுமா? என்று பல்வேறு தரப்பினருக்கும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் நாளை பெங்களூர் உள்பட கர்நாடகாவில் எவையெல்லாம் இயங்கும்? எவையெல்லாம் இயங்காது? என்பது பற்றிய முழு விவரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதோடு நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் தலா ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை எதிர்த்து ஏற்கனவே கர்நாடகா முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி பந்த் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்தார். அதன்படி நாளை கர்நாடகாவில் திட்டமிட்டப்படி பந்த் நடத்தப்படும் என்று இன்று வாட்டாள் நாகராஜ் உறுதியாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் பந்த்துக்கு நடுவே நாளை பெங்களூர் உள்பட கர்நாடகாவில் பஸ், ஆட்டோக்கள், மெட்ரோ ரயில்கள் இயங்குமா? பள்ளி, கல்லூரிகள் செயல்படுமா? நாளை பந்த் போராட்டத்துக்கு யாரெல்லாம் ஆதரவு கொடுத்துள்ளனர்? யாரெல்லாம் ஆதரவு கொடுக்கவில்லை என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:
பள்ளி - கல்லூரிகள் இயங்குமா?
நாளை நடக்கும் பந்த் போராட்டத்துக்கு கர்நாடகா தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பான கேஏஎம்எஸ் (KAMS or Karnataka Associated Managments of Schools) முதலில் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து இருந்தது. ஆனால் தற்போது மழை பெய்து அணைகளில் தண்ணீர் உள்ளதால் இந்த ஆதரவை வாபஸ் வாங்கி உள்ளது. இதனால் நாளை பெங்களூர் உள்பட கர்நாடகா தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் காவிரி விவகாரம் பற்றியும், காவிரி நீரின் முக்கியத்துவம் பற்றியும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்படும். தேவை என்றால் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணி செய்வார்கள் என்று கேஏஎம்எஸ்அமைப்பின் பொது செயலாளர் சசிகுமார் கூறியுள்ளார். மேலும் தனியார் கல்லூரிகள் தற்போது வரை பந்த்துக்கு ஆதரவு வழங்கவில்லை.
அதேபோல் நாளை நடக்கும் பந்த்துக்கு கர்நாடகா அரசு தொடக்கம் முதலே ஆதரவு வழங்கவில்லை. பந்த்-தை கைவிட வேண்டும் என்று முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட பல அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் நாளை அரசு பள்ளிகளும், அரசு கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ளது.
நாளை எவையெல்லாம் இயங்கும்?
* மருத்துவமனை
* மெடிக்கல்
* வங்கிகள்
* கர்நாடகா அரசு போக்குவரத்து கழக பஸ்கள் (கேஎஸ்ஆர்டிசி)
* பெங்களூர் மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் (பிஎம்டிசி)
* மெட்ரோ ரயில்கள்
* ஆட்டோக்கள்
* வாடகை கார்கள் (டாக்ஸி)
* பள்ளி - கல்லூரி வாகனங்கள்
* ஏர்போர்ட் டாக்ஸி
* ஹோட்டல்கள்
* வணிக வளாகங்கள்
* மளிகை கடைகள்
* அரசு அலுவலகங்கள்
* தனியார் நிறுவனங்கள்
* தொழிற்சாலைகள்
* டீ கடைகள் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதலில் நாளைய பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது கர்நாடகா அணைகள் நிரம்பி உள்ளதால் கொடுத்த சப்போர்ட்டை திரும்ப பெற்றுள்ளனர்.
கர்நாடகா - தமிழ்நாடு பஸ் சேவை
இன்றைய நிலவரப்படி கர்நாடகா - தமிழ்நாடு இடையே பஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. நாளை பந்த் நடத்தப்படுவதால் கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் பதற்றம் ஏற்படலாம். இதனால் முன்னெச்சரிக்கையாக பஸ் போக்குவரத்து தடைப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுபற்றிய உறுதியான தகவல் நாளைய தினம் நடக்கும் பந்த் போராட்டத்தை பொறுத்தே அமையும்.
பந்த்துக்கு யாரெல்லாம் ஆதரவு?
* வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு
* டாக்டர் ராஜ்குமார் (நடிகர்) ரசிகர் மன்றம்
* கன்னட சேனை
* கன்னட ஜாக்ருதி வேதிகே உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மட்டுமே நாளைய பந்த் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி உள்ளனர்.
பந்த்துக்கு ஆதரவு வழங்காத அமைப்புகள் எவை?
* கர்நாடகா ரக்ஷண வேதிகே (சிவராமே கவுடா குழு)
* கர்நாடகா ரக்ஷண வேதிகே (நாராயணகவுடா குழு)
* கர்நாடகா ரக்ஷண வேதிகே (பிரவீன் ஷெட்டி குழு)
* கர்நாடகா மாநில விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
* தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு
* ஹோட்டல் சங்கங்களின் கூட்டமைப்பு
* கேஎஸ்ஆர்டிசி, பிஎம்டிசி போக்குவரத்து கழகங்கள்
* பெரும்பாலான ஆட்டோ சங்கங்கள் ஆதரவு இல்லை
* தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு
* டிராவல்ஸ் அசோசியேஷன் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு கொடுக்கவில்லை.
இயல்பு வாழ்க்கை பாதிக்க வாய்ப்பில்லை
இதனால் நாளைய தினம் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கர்நாடகா பந்த் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இருக்காது. வழக்கம்போல் ஆட்டோ, பஸ்கள், டாக்ஸிகள், மெட்ரோ ரயில்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட நாளை ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் மேற்கூறிய சேவைகளில் மாற்றம் ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications
