ரிஸ்க் வேண்டாம்.. கர்நாடகாவில் "சேப் கேம்" ஆடும் அமித் ஷா.. வேட்பாளர் லிஸ்டில் இதை கவனிச்சீங்களா?
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பல சுவாரசியமான விஷயங்கள் இடம் பிடித்து உள்ளன. முக்கியமாக பாஜக மிகவும் கவனமாக பார்த்து பார்த்து வேட்பாளர் பட்டியலை தயார் செய்துள்ளது தெளிவாகிறது.
189 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. 9 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. காங்கிரசில் இருந்து பாஜக வந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
சிட்டிங் எம்எல்ஏக்களை பெரிதாக பகைத்துக்கொள்ளாமல் பாஜக இந்த முறை சேப் கேம் ஆடி உள்ளது. இன்னும் 35 எம்எல்ஏ வேட்பாளர்களை பாஜக அறிவிக்க வேண்டும். அதில் 10 எம்எல்ஏக்கள் வரை வாய்ப்புகளை இழக்கலாம். இருந்தாலும் பாஜக இந்த முறை பெரிய அளவில் சிட்டிங் எம்எல்ஏக்களை பகைக்காமல் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது.

பெரிய அளவில் எம்எல்ஏக்கள் ஓரம்கட்டப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அதை தவிர்த்து உள்ளது. இப்போது இருக்கும் ஜாதி வேறுபாடு, எம்எல்ஏக்கள் உள்ளூர் ஆதரவு இதை எல்லாம் மாற்ற வேண்டாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்து பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது.
முக்கியமாக காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கோட்டையான பழைய மைசூர் பகுதியில் பாஜக பெரும்பாலும் ஏற்கனவே இருக்கும் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது, அதோடு அங்கே தோல்வி அடைந்த இடங்களில் மட்டும் புதிய முகங்களை மீண்டும் களமிறக்கி உள்ளது.
கடலோரப் பகுதிகளில்தான் பாஜக கொஞ்சம் ரிஸ்க் எடுத்துள்ளது, ஏனென்றால் அங்கே பாஜகவிற்கு ஏற்கனவே நல்ல ஆதரவு உள்ளது. மீதமுள்ள 35 இடங்கள் சிக்கலானவை என்பதால் இப்போதைக்கு பாஜக அங்கே வேட்பாளர்களை அறிவிக்கவில்லை..
இந்த பட்டியலில் மொத்தம் 52 புதிய முகங்கள் உள்ளனர். ஆனாலும் இவர்கள் எல்லாம் நீண்டகால பாஜக பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தப் பட்டியலில் ஒன்பது மருத்துவர்கள் உள்ளனர். அதேபோல் 5 வழக்கறிஞர்கள், 3 கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உள்ளார். மேலும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், முன்னாள் அரசு ஊழியர்கள் 3 பேர், சமூக ஆர்வலர்கள் 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூரு முன்னாள் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் சாமராஜ்பேட்டையிலும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் பிபிஎம்பி கமிஷனருமான அனில் குமார் கொரட்டகெரே தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பாஜக எம்எல்ஏவும் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர் அசோக் தனது சொந்த தொகுதியான பத்மநாபநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார், மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரை எதிர்க்க ஆர் அசோக் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இன்னொரு பக்கம் வருணா தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவை எதிர்த்து எம்.எல்.ஏ.வும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான வி.சோமன்னா போட்டியிடுகிறார். சோமன்னா இன்னொரு பக்கம் சாமராஜ்நகரிலும் போட்டியிடுகிறார். இரண்டு முக்கிய தலைவர்களுக்கு எதிராக அங்கு அமைச்சர்கள் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரசின் இரண்டு முக்கிய தலைவர்களும் வெற்றிபெற கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது தெளிவாகிறது.
முதல்வர் பொம்மை தனது தற்போதைய தொகுதியான ஷிகான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications