Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பெருத்த துரோகம்".. ஆபரேஷன் கமலாவின் "மாஸ்டர் மைண்டையே".. வெளியே அனுப்பிய பாஜக.. கர்நாடகாவில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இடையில் அங்கே கடந்த முறை ஆபரேஷன் கமலா நடக்க காரணமாக இருந்தவரையே பாஜக கழற்றிவிட்டு உள்ளது. பாஜகவினர் இடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 19 வருடங்களில் 3 முறை தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதில் 2004 தொங்கு சட்டசபை, 2008 தொங்கு சட்டசபை, 2018 தொங்கு சட்டசபைகள் முக்கியமானது ஆகும். அதிலும் கடந்த தேர்தலுக்கு பின் அங்கே 3 முறை முதல்வர்கள் மாறியது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை தொங்கு சட்டசபைக்கு பதிலாக ஏதாவது ஒரு கட்சி முழு மெஜாரிட்டி இந்த முறை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கணிப்புகள் பல காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. இந்த தேர்தலில் 3 பெரிய கட்சிகளும் பல சிறிய சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Karnataka BJP candidates list: Why Operation Kamala mastermind N R Santhosh did not get a chance?

தேர்தல்: கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கே பாஜக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. 10 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. காங்கிரசில் இருந்து பாஜக வந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து நேற்று முதல்நாள் இரவு 23 பேரின் பெயர் வெளியிடப்பட்டது. முதல் கட்ட பட்டியலில் 189 பேரில் 10 எம்எல்ஏக்கள் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இரண்டாவது கட்டமாக வெளியிடப்பட்ட 23 எம்எல்ஏக்கள் பட்டியலில் 6 எம்எல்ஏக்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 16 எம்எல்ஏக்கள் வாய்ப்பை இழந்து உள்ளனர்.

இதில் வாய்ப்பு கிடைக்கும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் அர்சிகெரே தொகுதியில் போட்டியிட வேண்டிய என்ஆர் சந்தோஷ். அர்சிகெரே தொகுதியில் சந்தோஷ் பெயர் இல்லாதது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Karnataka BJP candidates list: Why Operation Kamala mastermind N R Santhosh did not get a chance?

யார் இவர்?: பாஜக அரசிலில் மிகவும் பிரபலமான இளைஞர் என்றால் அது அர்சிகெரே என்ஆர் சந்தோஷ்தான். 2019ல் ஆபரேஷன் கமலா மூலம் குமாரசாமியின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமாக இருந்தவர் சந்தோஷ்தான். அங்கே இவர்தான் ஆபரேஷன் கமலாவை நடத்தியது. 2013ல் சம்பந்தமே இல்லாமல் திடீரென அரசியல் லைம்லைட்டிற்கு வந்த சந்தோஷ்.. திடீரென எடியூரப்பாவுடன் நெருக்கம் ஆனார். அப்போதில் இருந்து அவருடன் மிக நெருக்கமாக வலம் வந்தார்.

எடியூரப்பா என்ன சொன்னாலும் கேட்க கூடிய நபராக சந்தோஷ் இருந்தார். எடியூரப்பாவிற்கும் எல்லாமுமாக இருந்தது சந்தோஷ்தான். 2019ல் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்த போது எம்எல்ஏக்களை பாதுகாத்தது இவர்தான்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி மும்பை கொண்டு போனது, எடியூரப்பாவை ஆட்சியில் அமர வைத்தது எல்லாம் சந்தோஷ்தான். அமைச்சர் ரமேஷ் ஜெர்கிகோலியுடன் நெருக்கமாக அந்த காலத்தில் சந்தோஷ் இருந்து.. இருவரும் சேர்ந்துதான் எடியூரப்பாவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

இதனால் சந்தோஷ் கண்டிப்பாக கட்சியில் பெரிய பதவியை பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து எடியூரப்பா வீட்டிலேயே கிடையாக கிடந்த சந்தோஷை.. எடியூரப்பா தனது மகனுடன் பணி செய்யும்படி அனுப்பி வைத்தார். ஆனால் சில காலத்திலேயே இவர்கள் இருவருக்கும் சண்டை வந்தது. இதனால் சந்தோஷை கட்சியில் இருந்து நீக்கும்படி எடியூரப்பா மகன் விஜயேந்திரா தனது அப்பாவிடம் உத்தரவிட்டார்.

இதை கேட்டு ஷாக்கான சந்தோஷ் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு கூட முயன்று உள்ளார். ஆனால் இதை தெரிந்து கொண்டு எடியூரப்பா சந்தோஷ் மீது பரிதாபப்பட்டு அவரை ஒதுங்கி இருக்கும்படி கூறினார்.

என்ன நடந்தது?: இதையடுத்து அர்சிகெரே தொகுதிக்கு சென்ற சந்தோஷ் அங்கே தேர்தல் பணிகளை செய்ய தொடங்கினார். அங்கே நிற்பதற்கான பணிகளை தீவிரமாக செய்து வந்தார். அர்சிகெரேவில் தனியாக நடக்கும் கட்சி கூட்டங்களில் நான்தான் எடியூரப்பாவின் அரசியல் வாரிசு. விஜயேந்திராவிற்கு எதுவும் தெரியாது என்றெல்லாம் சந்தோஷ் பேசி இருக்கிறார்.

இதை தெரிந்து கொண்டு விஜேயந்திரா மீண்டும் எடியூரப்பாவிடம் விஷயத்தை சொல்ல.. இந்த முறை எடியூரப்பா சந்தோஷையே அழைத்து திட்டியதோடு.. அவருக்கு எதிராக பாஜக நிர்வாகிகளையும் திருப்பி உள்ளார். அதோடு சந்தோஷ் அப்படி ஒதுக்கப்பட்டார்.

இதையடுத்து இடையில் பொம்மை ஆட்சிக்கு வர.. எடியூரப்பா அமைதியாக எப்படியும் அர்சிகெரேவில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சந்தோஷ் நம்பினார். அதே தொகுதியில் மீண்டும் தேர்தல் பணிகளை செய்தார். ஆனால் தேர்தல் சமயத்தில் மீண்டும் எடியூரப்பாவிற்கு மீண்டும் பாஜக தேசிய தலைமை ஆதரவு கொடுத்தது. தேர்தல் பிரச்சார குழு தலைவர், வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை என்று அமித் ஷா மனசு மாறினார்.

எடியூரப்பா மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார். இதனால் வாய்ப்பு கிடைக்கும் என்று அர்சிகெரேவில் பல கோடிகளை செலவு செய்த சந்தோசுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அங்கே ஆபரேஷன் கமலாவின் மாஸ்டர்மைண்ட் தற்போது சீட் கிடைக்காமல் அதிர்ச்சியில் உறைந்து உள்ளார். அதோடு பாஜகவில் இருந்து அவர் ஆட்சியை கவிழ்த்த அதே ஜேடிஎஸ் கட்சிக்கு செல்ல என்ஆர் சந்தோஷ் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள் கர்நாடக அரசியல் வல்லுனர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+