கர்நாடகா பாஜக செம்ம ஹேப்பி.. முதல்வர் பதவியை விட்டுத்தர சித்தராமையா மறுப்பு- டிகே சிவகுமார் அப்செட்!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவி விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் இடையே வெடிக்க தொடங்கியிருக்கும் மோதல் கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதால் பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சர்ச்சை வெடித்தது. கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக உள்ள டிகே சிவகுமார் தமக்குதான் முதல்வர் பதவி என்பதில் பிடிவாதம் காட்டினார். ஆனால் சித்தராமையா முதல்வர் பதவியை பெறுவதில் முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றார்.

முதல்வர் பதவி பகிர்வு: இதனையடுத்து சித்தராமையா முதல்வராகவும் துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவியேற்றனர். அப்போதே சித்தராமையா இரண்டரை ஆண்டுகள் முதல்வராகவும் டிகே சிவகுமார் அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல்வராகவும் இருப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பாஜகவின் ஆரூடம்: இருந்த போதும் டிகே சிவகுமார் ஆதரவு ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு சித்தராமையா ஆதரவாளர்கள் பதில் தருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும்; லோக்சபா தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் என பாஜக இடைவிடாமல் ஆரூடம் கூறி வருகிறது.
டிகேஎஸ் ஆதரவாளர்கள் கலகம்: இப்போது முதல்வர் பதவி தொடர்பாக உச்சகட்ட மோதல் காங்கிரஸில் வெடித்துள்ளது. மண்டியா தொகுதி எம்.எல்.ஏவும் டிகே சிவகுமாரின் ஆதரவாளருமான ரவிக்குமார் கவுடா, அடுத்த 2.5 ஆண்டுகள்தான் சித்தராமையா முதல்வர்; அதன்பின்னர் டிகே சிவகுமார் முதல்வராக பதவி ஏற்பார் என்றார்.
டிகேஎஸ்-க்கு எதிராக சித்து சதி: இதற்கு பதிலடி தரும் வகையில் சித்தராமையா அதிரடி வியூகம் வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் இல்லத்தில் சில நாட்களுக்கு முன்னர் திடீர் விருந்துக்கு சித்தராமையா ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில் டிகே சிவகுமாருக்கு எதிரான சித்தராமையா ஆதரவாளர்கள் பங்கேற்றனர். சித்தராமையா தமக்குப் பின்னர் டிகே சிவகுமாருக்கு பதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரை முதல்வராக்கும் சதித் திட்டத்துடன் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் எனவும் கூறப்பட்டது.
சித்தராமையா பேச்சும் டிகேஎஸ் மவுனமும்: இந்நிலையில் சித்தராமையா பகிரங்கமாக முதல்வர் பதவி குறித்து பேசியிருக்கிறார். கர்நாடகா முதல்வராக தாம் 5 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடிப்பேன் என வெளிப்படையாக அறிவித்துள்ளார் சித்தராமையா. அவரது இந்த கருத்துக்கு பதில் தர டிகே சிவகுமார் மறுத்துவிட்டார். அத்துடன் தமது ஆதரவாளர்களையும் பொதுவெளியில் சித்தராமையாவை விமர்சித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார் சித்தராமையா. இதனால் கர்நாடகா காங்கிரஸில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது கர்நாடகா பாஜக தலைவர்களை ரொம்பவே மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications