பிரஜ்வல் ரேவண்ணாவின் 2,976 ஆபாச வீடியோக்கள்.. 5 மாதங்களுக்கு முன்னரே பாஜக தலைமைக்கு தெரியும்?
பெங்களூர்: முன்னாள் பிரதமதர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,976 ஆபாச வீடியோக்கள் குறித்து 5 மாதங்களுக்கு முன்னரே கர்நாடகா பாஜக தலைமைக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஜேடிஎஸ் (மதச்சார்பற்ற ஜனதா தளம்) படுதோல்வி அடைந்தது. ஜேடிஎஸ் கட்சியின் வாக்கு வங்கியாக இருந்தது ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகள். ஆனால் காங்கிரஸ் இந்த வாக்கு வங்கியை பெருமளவு கபளீகரம் செய்துவிட்டது. இதனால் ஜேடிஎஸ் கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது.

பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ்: இதனையடுத்து ஜேடிஎஸ் கட்சிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தது பாஜகதான். இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய ஜேடிஎஸ் கட்சி முடிவெடுத்தது. ஆனால் ஜேடிஎஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க பாஜகவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்படி எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர்தான் ஜி. தேவராஜே கவுடா. 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக ஒலேநரசிபுரா தொகுதியில் போட்டியிட்டவர். கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி மாநில பாஜக தலைவரான விஜயேந்திராவுக்கு தேவராஜே கவுடா, பிரஜ்வல் ரேவண்ணா குறித்து கடிதம் எழுதினார்.
2976 ஆபாச வீடியோக்கள்: விஜயேந்திராவுக்கு தேவராஜே கவுடா எழுதிய கடிதத்தில், தேவகவுடா குடும்பத்தின் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,976 ஆபாச வீடியோக்களைக் கொண்ட பென் டிரைவ் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பலாத்காரங்கள் உள்ளிட்ட பாலியல் அத்துமீறல்கள் இடம் பெற்றுள்ளன. பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்வதற்காகவே பிரஜ்வல் இவற்றை வீடியோவாக பதிவு செய்திருக்கலாம். இந்த வீடியோக்கள் ஏற்கனவே காங்கிரஸ் மேலிடத்துக்கும் போய்விட்டது. ஆகையால் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவும் வேண்டாம். ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணாவை பாஜக கூட்டணி வேட்பாளராக நிறுத்தினால் இந்த வீடியோக்களை காங்கிரஸ் பிரம்மாஸ்திரமாகவும் பயன்படுத்திவிடும். இது தேசிய அளவில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியைத் தரும். ஆகையால் உடனடியாக தேசிய தலைமைக்கு இந்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். நாம் ஒருபோதும் தேவகவுடா குடும்பத்தின் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணியே வைக்க வேண்டாம் என வலியுறுத்தி இருந்தாராம். இந்த தகவல்கள் தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications