"பகவத் கீதை அனைத்தையும் விட மேலானது.. பைபிள் உடன் அதை ஒப்பிட வேண்டாம்!" கர்நாடக பாஜக அமைச்சர் கருத்து
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தொடர்ந்து இப்போது பைபிள் விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், அம்மாநில அமைச்சர் பி.சி.நாகேஷ் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய ஹிஜாப் விவகாரம் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர் தான் சற்று ஓய்ந்தது.
அதன் பின்னர் சில வாரங்களிலேயே இந்து கோயில்கள் முன்பு இருந்த முஸ்லீம் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், முஸ்லீம் இறைச்சி வியாபாரிகள் ஹலால் செய்யப்படாத இறைச்சியை விற்க வேண்டும் என்ற சர்ச்சையும் எழுந்தது.

கர்நாடகா
இப்படி அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்பங்கள் கர்நாடகாவில் தொடர்ந்து பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பெங்களூரில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் புனித புத்தகமான பைபிளை எடுத்துச் செல்வதை எதிர்க்க மாட்டோம் என்று பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் உறுதிமொழி வாங்கி உள்ளது. இந்தச் செயலுக்கு அங்குள்ள வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலானது
அதேநேரம் பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கும் போது, பைபிளை எடுத்துச் செல்வதில் என்ன தவறு என்ற ரீதியிலும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாகக் கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறிய கருத்துகள் பெரிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கீதை மத புத்தகம் இல்லை என்றும் அது அனைத்தையும் விட மேலானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மத புத்தகமே இல்லை
இது தொடர்பாக அமைச்சர் பி.சி.நாகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பகவத் கீதையையும் பைபிளையும் கலக்காதீர்கள். பகவத் கீதை ஒரு மத புத்தகம் அல்ல. அது மதப் பழக்கங்களைப் பற்றிப் பேசவில்லை. பிரார்த்தனை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அடிப்படையில் அது எல்லாவற்றுக்கும் மேலானது. மாணவர்களின் மன உறுதியை மேம்படுத்தும் எதையும் மாரல் சயின்ஸில் சேர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறி உள்ளார்.

வலதுசாரி அமைப்புகள்
முன்னதாக பெங்களூர் பள்ளி விவகாரம் தொடர்பாக இந்து ஜனஜக்ருதி சமிதி மாநில செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், "இந்த பள்ளி கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களைப் பைபிளை படிக்க வற்புறுத்துகிறது" என்று குற்றஞ்சாட்டி உள்ளார். அதாவது அங்குக் கிறிஸ்தவர் அல்லாத மாணவர்கள் படிப்பதாகவும் அவர்களையும் பள்ளி நிர்வாகம் பைபிளை படிக்க வற்புறுத்துவதாகக் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவு
இந்த விவகாரம் அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பெங்களூரு மாவட்ட ஆணையருக்குக் கடிதம் எழுதி உள்ளது. பைபிளைக் கற்பிப்பதைக் கட்டாயமாக்குவது இந்திய அரசியலமைப்பின் 25வது பிரிவை மீறுவதாகும் என்ற அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏழு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று என்சிபிசிஆர் கூறியுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications