Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைமைச் செயலக வளாகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கர்நாடக பாஜக எம்எல்ஏ!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா முன்னாள் அமைச்சரும், பாஜக சிட்டிங் எம்எல்ஏவுமான முனிரத்னா மீது பாலியல் வன்கொடுமை புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலையில், சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்தும், அரசு வழங்கிய காரில் வைத்தும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சட்டப் பேரவை எம்எல்ஏ அலுவலக வளாகத்தை சுத்தம் செய்யும் பரிகாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களை போலீஸார் கைது செய்தனர்.

bjp mla munirathna

கர்நாடகத்தில் கடந்த பாஜக ஆட்சியில் தோட்டக்கலை, திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக இருந்தவர் முனிரத்னா. சினிமா தயாரிப்பாளராகவும் உள்ள முனிரத்னா, தற்போதும் ராஜராஜேஷ்வரி நகர் தொகுதியின் பாஜக சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

சமீபத்தில் ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டிய புகாரில், காவல் துறை முனிரத்னாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முனிரத்னம் காவல் துறையின் கஸ்டடியில் உள்ளார். முனிரத்னம் செல்வராஜ் என்ற ஒப்பந்தாரரை, "ரேணுகாசாமிக்கு நடந்தது உனக்கும் நடக்கும். எனக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை கொடுத்துவிடு." என்று கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

செல்வராஜ், முனிரத்னாவுக்கு ரூ. 1 லட்சம் கொடுக்க முன் வந்துள்ளார். ஆனால், முனிரத்னா ரூ .20 லட்சம் வேண்டும் என்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதில் முனிரத்னா செல்வராஜின் குடும்ப உறுப்பினர்களையும் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதுகுறித்து வியாலிக்கவார் காவல் நிலையத்தில் முனிரத்னா மீது இரண்டு தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முனிரத்னா ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, பெங்களூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் முனிரத்னா மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ராம்நகர் மாவட்டம், கக்காலிபுரா காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு ரிசார்ட் உள்ளது. அங்கு வைத்து முனிரத்னா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதற்கு அவரின் ஆதரவாளர்கள் துணை நின்றதாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதை வீடியோ பதிவு செய்து முனிரத்னா பிளாக் மெயில் செய்து மிரட்டுவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு ஆண் ஒருவரை வைத்து தன்னை ஹனி ட்ராப் செய்ய முயற்சி செய்ததாகவும் அந்தப் பெண் புகார் வைத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் முனிரத்னா, விஜய்குமார், சுதாகரா, கிரண் குமார், லோஹித் கவுடா, மஞ்சுநாத் மற்றும் லோகி ஆகியோர் மீது பத்து பிரிவுகளின் கீழ் கக்காலிபுரா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல் கண்காணிப்பாளர் செளமியா லதா தலைமையில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டது. ஜெயிலில் இருந்த முனிரத்னாவை சிறப்பு விசாரணைக் குழு மீண்டும் கைது செய்து, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது. இந்நிலையில், கர்நாடக சட்டப் பேரவையில் உள்ள முனிரத்னாவின் அலுவலகத்தில் வைத்தும், அரசு வழங்கிய காரில் வைத்தும் முனிரத்னா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வீடியோல் கால் செய்ததாகவும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, முனிரத்னாவில் செல்போனை கைப்பற்றி சைபர் பிரிவு காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் முனிரத்னா மறுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+