எதே.. மருது பாண்டியர்களுக்கு மாறுவேசமா? கவுடா பிரதர்ஸ் என கர்நாடக பாஜக பிரச்சாரம்! வெடித்த சர்ச்சை
வரலாற்று ஆய்வாளர்களால் முழுக்க முழுக்க கற்பனை கதாபாத்திரங்கள் என்று கூறப்படும் இந்த உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்களை நிஜம் என்று சொல்கிறது பாஜக.
பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான கவுடாக்களை கவர பாஜக உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்கள் பற்றி பேசி வரும் நிலையில் மருது பாண்டியர்களை போன்ற படங்களை பேனர்களில் பயன்படுத்தி வருகிறது.
கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது.
இதனால் எடியூரப்பாதான் பதவியேற்ற முதல்நாளே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பே பதவியும் விலகினார். கவுடா சமுதாயத்தை சேர்ந்த குமாரசாமி முதலமைச்சரானார்.

பவசராஜ் பொம்மை
ஆனால், 2019 ல் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கவர்ந்த பாஜக அவர்களை பதவி விலக செய்து மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைந்தது. அடுத்த சில ஆண்டுகளிலேயே எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி தூக்கியதால் அவரும் பதவி விலக, பசவராஜ் பொம்மை ஆட்சிக்கு வந்தார்.

சாதி வாக்குகள்
இந்த நிலையில் பாஜக அரசு ஆட்சிகாலம் மே மாதத்துடன் முடிவடைய இருப்பதால் இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது கர்நாடகா. குமாரசாமி அரசை கவிழ்ந்ததால் ஒரு பக்கம் வோகாலிகா எனப்படும் கவுடா சாதியினரின் அதிருப்தியையும் மறுபக்கம், எடியூரப்பாவை ஓரம் கட்டியதால் அவரது லிங்காயத்து சமூக மக்களின் அதிருப்தியையும் பெற்றது பாஜக.

பாஜகவின் திட்டம்
அண்மையில் வெளியான லோக் போல் நிறுவன கருத்துக்கணிப்பின்படி, பாஜக தோல்வியடையும் என்றும், காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக பல்வேறு வியாகங்களை வகுத்து அங்கு பிரச்சாரங்களை தொடங்கி இருக்கிறது. குறிப்பாக வோக்கலிகா மற்றும் லிங்காயத்துக்கு மக்களை கவரும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

கவுடா சகோதரர்கள்
அந்த வகையில், லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாவை சமீக காலமாக மீண்டும் முன்னிலைப்படுத்தி வருகிறது பாஜக. அதேபோல், கவுடா மக்களை ஈர்க்கும் வகையில் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்கள் குறித்து தற்போது பேசத் தொடங்கி உள்ளது. இந்த இருவரும்தான் திப்பு சுல்தானை கொன்றார்கள் என பாஜக தெரிவித்து வருகிறது.

மருது பாண்டியர்கள் படம்
வரலாற்று ஆய்வாளர்களால் முழுக்க முழுக்க கற்பனை கதாபாத்திரங்கள் என்று கூறப்படும் இந்த உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்களை தமிழ்நாட்டில் வாழ்ந்த மருது பாண்டிய சகோதர்களைபோல் உண்மையில் வாழ்ந்த போராளிகள் என்று பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், அதற்கு மருது பாண்டியர்களின் உருவத்தை சார்ந்து உள்ள படத்தை பயன்படுத்தியதுதான் கொடுமை.

பாஜக பிரச்சாரம்
ஆம், கர்நாடகாவில் பாஜகவினர் வைத்து இருக்கும் பேனர்கள், வரவேற்பு வளைவுகளில் எல்லாம் மருது பாண்டிய சகோதரர்களை போன்ற படத்தை போட்டு உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்கள் பாஜக பிரச்சாரம் செய்து இருக்கிறது. அக்கட்சியை சேர்ந்த சிடி ரவியே ட்விட்டரில் இந்த படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ்நாடு பாஜக
கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஆனால், அச்சு அசல் அதே மாதிரி படங்களை கர்நாடக பாஜகவினர் கவுடா சகோதர்கள் என்று கூறி பதிவிட்டு வருகிறார்கள். மன்னர்கள் தோற்றத்தை ஓவியர்கள் ஒரே மாதிரி வடிப்பது வழக்கம் என்றாலும், இது அசலாக மருது சகோதரர்களை போலவே உள்ளதுதான் சர்ச்சைக்கு காரணம்.

கவுடா சகோதரர்கள் குறித்து திரைப்படம்
குறிப்பாக கர்நாடக அமைச்சரும் தயாரிப்பாளருமான முனிரத்னா, கவுடா சகோதரர்களின் கதையை படமாக எடுப்பதாகவும் இதற்கு அம்மாநில உயர்கல்வி அமைச்சர் அஸ்வத் நாராயணன் கதை எழுத இருப்பதாகவும் போஸ்டர்களை வெளியிட்டார். அதிலும் மருது சகோதரர்களின் புகைப்படங்களையே பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு கவுடா சமுதாயத்தினரே எதிர்ப்பு தெரிவிக்க அந்த படத்தின் பணிகளை நிறுத்துவதாக அறிவித்து உள்ளார்.

திப்பு சுல்தானையே கொன்றார்களாம்
மத்திய அமைச்சர் சோபாவோ, உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்கள் திப்பு சுல்தானை கொன்றார்கள் என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அம்மாநிலத்தை சேர்ந்த ஆதிசுன்சனாகிரி மகாசமஸ்தான மடத்தின் சாமியார் நிர்மலானந்தா தெரிவிக்கையில், பாஜக தேர்தலுக்கு முன் சாதி வாக்குகளை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications