கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல் செய்த பாஜக அரசு..காதில் பூ வைத்து வந்த காங்.எம்எல்ஏக்கள்..ஏன் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று முதல்வர் பசவராஜ் பொம்மை பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனிடையே, பட்ஜெட் தாக்கலின் போது சட்ட சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காதில் பூ வைத்து இருந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 2½ மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போதே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்த பசவராஜ் பொம்மை
ஆளும் பாஜகவோ ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் விடாப்படியாய் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடிக்கடி கர்நாடா வருகை தருகின்றன. மறுபக்கம் பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் கர்நாடகம் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இத்தகைய அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று கர்நாடக சட்ட சபையில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தார்.

2 மணி நேரத்திற்கும் மேலாக
தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால் பல்வேறு கவரச்சிகர அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற்று வருகிறது. கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் (வங்கிகள், பள்ளி- கல்லூரிகள், தொழில்துறை நிறுவனங்கள்) அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் மற்றும் ராம்நகராவில் ராமர் கோவில் கட்டப்படும், பெங்களூர் மெட்ரோ விரிவாக்கம் என பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் பசவராஜ் பொம்மை வெளியிட்டார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவரது பட்ஜெட் உரை நீடித்தது.

காதில் பூ வைத்துக்கொண்டு
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்திருந்த எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் அனைவரும் காதில் பூ வைத்துக் கொண்டு வந்தனர். சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்கும் போது காதில் இருந்த பூவை எடுக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் போது தேர்தல் வாக்குறுதியில் அளித்த எந்த திட்டங்களையும் இதுவரை நிறைவேற்றவில்லை..அதேபோல், கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றாமல் மக்களை பாஜக அரசு ஏமாற்றிவிட்டதை சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூ வைத்துக்கொண்டு அவை நடவடிக்கையில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ட்ரெண்ட் ஆகும் KiviMeleHoova
கர்நாடக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான சித்தராமையா, தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தேர்தல் அறிக்கையில் 600 வாக்குறுதிகளை அளித்த பாஜக அதில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியிருப்பதாகவும் சித்தராமையா பல்வேறு தருணங்களில் பாஜக அரசை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் தான் கர்நாடக மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்தும் அடையாளமாக காதில் பூ வைத்துக் கொண்டு வந்து இருக்கின்றனர். காதில் பூ என்ற பொருள் படும் வார்த்தையான #KiviMeleHoova என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications