மேகதாது அணை ஆயத்த பணிகள் முடிவு.. கர்நாடகா பட்ஜெட்டில் தமிழகத்தின் தலையில் இடியை இறக்கிய சித்தராமையா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 2025-2026ம் ஆண்டுக்கான கர்நாடகா பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா இன்று தாக்கல் செய்தார். அதில் காவிரிக்கு குறுக்கே மேகதாவில் கர்நாடகா சார்பில் புதிய அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணி தொடங்கபபடும் என்று அறிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் அவர் இந்த அறிவிப்பை பட்ஜெட் குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இவர் தான் நிதித்துறையை கையாண்டு வருகிறார். இந்நிலையில் தான் 2025-2026ம் ஆண்டுக்கான கர்நாடகா பட்ஜெட்டை இன்று முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்து வருகிறார்.

karnataka budget 2025 siddaramaiah 2025

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார். இது அவரது 16வது பட்ஜெட்டாகும். இதன்மூலம் கர்நாடகாவில் அதிக முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த நபர் என்ற பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து சாதனை படைத்துள்ளார்.

கர்நாடகா முதல்வராக சித்தராமையா தற்போது 2வது முறையாக பொறுப்பு வகித்து வருகிறார். 2வது முறையாக பொறுப்பேற்ற பிறகு அவர் முதல் முறையாக 2023 -2024ல் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் மதிப்பு என்பது 3.27 லட்சம் கோடியாக இருந்தது. இதில் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. அதன்பிறகு 2024-25ம் ஆண்டில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மதிப்பு என்பது ரூ.3.71 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதனால் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் தலைநகர் பெங்களூருக்கு என்று சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் மக்கள் தொகை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இரட்டை மேம்பாலம் உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கர்நாடகாவில் ராமநகர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக உள்ளது. இந்த அணை கட்டினால் நம் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் என்பது கிடைப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் தமிழக அரசு மற்றும் நம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் கர்நாடகா அரசு அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது.

பெங்களூருக்கு காவிரியில் இருந்து தான் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு அணை என்பது தேவையானதாக உள்ளது. அதோடு தமிழகத்துக்கும் இந்த அணை உதவியாக தான் இருக்கும் என்று கர்நாடகா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் அணை கட்டப்படும் என்று முதல்வர் சித்தராமையா பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

அதேபோல் தமிழக அரசு சார்பில் கர்நாடகா - தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இடம் என்பது பைனல் செய்யப்பட உள்ளது. தற்போது கர்நாடகா அரசு சார்பில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஏதேனும் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. இருப்பினும் பட்ஜெட்டுக்கு முன்பாக நேற்றைய தினம் கர்நாடகா அரசு சார்பில் விமன நிலையத்துக்கான 3 இடங்கள் தேர்வு செய்து அனுமதி கோரி மத்திய விமான துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் கனகபுரா ரோட்டில் 4,800 ஏக்கர் மற்றும் 5,000 ஏக்கரில் 2 இடங்களும், நெலமங்களா அருகே குனிகல் ரோட்டில் 5,200 ஏக்கர் என மொத்தம் 3 இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை கர்நாடகா அரசு தேர்வு செய்துள்ளது. இதில் கனகபுரா ரோட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 2 இடங்களும் தெற்கு பெங்களூர் பகுதியில் வரும். இன்னும் சொல்லப்போனாதல் தற்போதைய கெம்பேகவுடா சர்வதே விமான நிலையத்தின் எதிர்திசையில் இந்த இடங்கள் வருகிறது. இன்னொரு இடம் என்பது ராமநகர் மாவட்டத்தில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+