கர்நாடக பட்ஜெட்டில் பெங்களூர் மக்களுக்கு பம்பர் அறிவிப்புகள்! சித்தராமையா ‛கிப்ட்’.. இதோ முழுவிவரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 2023-2024ம் ஆண்டுக்கான கர்நாடகா பட்ஜெட்டை இன்று முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். இதில் பெங்களூரில் வாழும் ஐடி ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஏராளமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் விபரம் வருமாறு:

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் தான் புதிதாக அமைந்த கர்நாடகா அரசின் முதல் பட்ஜெட்டை இன்று முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.

 Karnataka Budget: CM Siddaramaiahs new announcements for Bengaluru, full details here

இவர் ஏற்கனவே 13 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று அவர் 14வது பட்ஜெட்டை மாநிலத்துக்கு சமர்ப்பித்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய திட்டங்களை அவர் அறிவித்தார். குறிப்பாக ஐடி நகராக விளங்கும் பெங்களூருவுக்கும், பெங்களூர் மக்களுக்கும் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா அறிவித்ததாவது:

100 ஏக்கர் தொழில்பூங்கா: பெங்களூர் சிட்டி என்பது எலக்ட்ரானிக்ஸ் சார் துறையில் சிறந்து விளங்குகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் பெங்களூர் காடுகோடியில் 100 ஏக்கர் பரப்பில் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். இது எலக்ட்ரானிக்ஸ் தொழில் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமாக செயல்படுவது மட்டுமின்றி செமி-கண்டக்டர் தொடர்பான பரிசோதனைகள், வடிவமைப்புகள், மேம்பாடு உள்ளிட்ட பணிகளும் இதில் மேற்கொள்ளப்படும்.

விண்வெளி தொழில் மையம்: சிறிய மற்றும் நடுத்தர தொழிலை மேம்படுத்தும் வகையில் விண்வெளித்துறையை வலுப்படுத்தும் நோக்கத்தில் பெங்களூர் தேவனஹள்ளியில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பூங்காவில் அதிநவீன கர்நாடகா விண்வெளி தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.

இண்டஸ்ட்ரியல் டவுன்ஷிப்: சென்னை-பெங்களூர் வழித்தடத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் மாநில அரசுக்கு சொந்தமான BEML நிலத்தில் மெகா இண்டஸ்ட்ரியல் டவுன்ஷிப் உருவாக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூர் நகரில் 20 கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் உருவாக்கப்படும். இதற்காக பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ரூ.1,411 கோடி சொந்த நிதியை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.263 கோடி மேம்பாலம்: பெங்களூர் பையப்பனஹள்ளி அருகே ரயில்வே சார்பில் சர்எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையத்தில் இருந்து மெட்ரோ, சாலை இணைப்பு இல்லை. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ரூ.263 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படும்.

ஒயிட் டாப்பிங் ரோடு: 2023-24ம் ஆண்டில் ரூ.800 கோடி செலவில் பெங்களூரில் 100 கிலோமீட்டர் தொலைவுக்கு முக்கிய சாலைகள் ஒயிட் டாப்பிங் ரோடாக மேம்படுத்தப்படும். இதன்மூலம் அடிக்கடி ரோடு பழுதடைவதும், சீரமைக்கப்படுவதும் தடுக்கப்படும்.

சாலை மேம்பாடு: மேலும் பெங்களூர் நகரில் 192 கிலோமீட்டர் தொலைவுக்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதில் 92 கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2023-24ல் 83 கிலோமீட்டர் சாலை ரூ.273 கோடியில் மேம்படுத்தப்படும். அதோடு பெங்களூரில் 15 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ரிங் ரோடு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

பிராண்ட் பெங்களூர் தீம்: பிராண்ட் பெங்களூர் தீம் என்பது பெங்களூர் மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதாகும். இதன்மூலம் போக்குவரத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, பொதுசுகாதாரம், மின் ஆளுமை, நீர் பாதுகாப்பு, வெள்ள மேலாண்மை உள்ளிட்ட 9 சவால்களுக்கு அறிவியல்ரீதியாக தீர்வு கண்டு பெங்களூரை உலகதரத்துக்கு மேம்படுத்துவோம்'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+