பெண்களுக்கு மாதம் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.. கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக அரசு, பெண்கள் நலன் மற்றும் பணியிடங்களில் அனைவரையும் உள்ளடக்கிய சூழலை மேம்படுத்தும் நோக்கில், மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025-க்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், பெண்கள் மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மாதவிடாய் விடுமுறை கொள்கையானது அரசு அலுவலகங்கள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பிற தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பொருந்தும். இந்தக் கொள்கை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட 6 மாதவிடாய் விடுமுறைகள் என்ற திட்டத்திலிருந்து, தற்போது ஆண்டுக்கு 12 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் வகையில் இந்தக் கொள்கை மேம்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், "பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். இது நாம் கொண்டு வந்துள்ள மிகவும் முற்போக்கான புதிய சட்டம். பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு ஏற்ப, ஒரு மாதத்துக்கு ஒரு முறை அல்லது ஒரே நேரத்தில் என மொத்தம் 12 நாள்கள் வரை விடுப்பு எடுக்கலாம். இது பெண்களின் நலனை சிந்திக்கும் ஒரு முற்போக்கான அரசின் பெருமைக்குரிய விஷயம்" என்று தெரிவித்தார்.
கேரளாவில், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் இரண்டு நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்கள் ஆண்டுக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்குகின்றன. ஆனால், இவை மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மாதவிடாய் விடுப்பு என்பது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பெண்கள் தங்கள் உடல் நலத்தை பேணி, பெண்களின் பணிச் சூழலை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த விடுப்பு, பெண்களின் ஆரோக்கியத்துக்கும், அவர்களின் பணி வாழ்க்கையை சமநிலைப்படுத்தவும் உதவும். பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் வலியை உணர்ந்து, அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நல்ல முயற்சி என்று அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா மாநிலங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications