கர்நாடகா முதல்வராக பதவியேற்ற சித்தராமையா.. நேரில் வாழ்த்திய ராகுல், பிரியங்கா, ஸ்டாலின், கமல்!
பெங்களூர்: கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்றனர். இந்த விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். மாறாக மம்தா பானர்ஜி இந்த விழாவை புறக்கணித்தார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. மாறாக பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இதையடுத்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா முதல்வராகவும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் மதியம் 12.30 மணிக்கு நடந்த விழாவில் பதவியேற்றனர்.
சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராக பதவி பிரமாணம் எடுத்து கொள்ள உள்ளனர். மேலும் இவர்களுடன் சேர்ந்து 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மத்திய பிரதேச மாஜி முதல்வர் கமல்நாத் உள்பட பல தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். சோனியா காந்தி பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்ளிட்டவர்களும் விழாவில் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான ராஜா பங்கேற்றனர்.
இருப்பினும் கூட மம்தா பானர்ஜி இந்த விழாவில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். அவருக்கு பதிலாக மேற்கு வங்க அரசு சார்பில் மக்களவை எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் கலந்து கொண்டார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. ஆனால் மம்தா பானர்ஜி பிடிகொடுக்காமல் தொடர்ந்து நழுவி வருகிறார். அதேபோல் இந்த விழாவில் அழைப்பு விடுக்கப்படாததால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி ஆம்ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications