தண்ணீர் விடாவிட்டால் அடிச்சிட்டு போயிரும்.. பந்த் வேண்டாம்.. வெள்ளத்தால் பதறும் டிகே சிவகுமார்
பெங்களூர்: "கர்நாடகா அமைப்புகள் பந்த் போராட்டத்தை நடத்த கூடாது, அணைகளில் நாம் தண்ணீரை தேக்கி வைத்தால் நீர் நம் அனைவரையும் அடித்துச் சென்றுவிடும்" என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு டி.கே. சிவக்குமார் சென்றிருந்தார். முதல்வராக பதவியேற்ற பிறகு அவர் முதல்முறையாக அந்த கோயிலுக்கு சென்றிருந்தார்.

அப்போது மைசூர் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், "இந்த நாட்டில் நாம் அனைவரும் சமம். கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்க வேண்டியுள்ளது. அதே நேரம் மாநிலத்தின் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும். 15 நாட்களுக்கு தினமும் 3500 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நாளை அனைத்து கட்சி, சட்ட வல்லுனர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்து ஒரு முடிவு எடுப்போம். அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் எவ்வளவு இருக்கிறது என்ற தகவல்கள் காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தில் உள்ளது.
அணை முழுமையாக நிரம்பிவிட்ட நிலையில் தண்ணீரை அப்படியே தேக்கி வைத்திருக்கக் கூடாது. கபிணி அணை நிரம்பியுள்ள நிலையில் நான் இந்த மைசூருக்கு வந்திருக்கிறேன்.
இயற்கை என்பது யாருக்கும் சொந்தமில்லை. நாம் இயற்கையுடன் ஒத்து போய் வாழ வேண்டும். தண்ணீர் அணைகளில் நிரம்பிவிட்டால் அதை நாம் தேக்கி வைக்கக் கூடாது.
அணையில் நிறைய தண்ணீர் செல்வதால் விவசாயிகளோ வேறு அமைபபினரோ தண்ணீரை பாதுகாக்கிறேன் என சொல்லிக் கொண்டு தண்ணீரில் இறங்க வேண்டும். ஒவ்வொருவரின் உயிரும் விலைமதிப்பில்லாதது.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி பந்த் போராட்டத்தை கைவிட வேண்டும். பொதுச் சொத்திற்கு குந்தகம் ஏற்படுத்த கூடாது. அரசோ, நீதிமன்றமோ இதை எதிர்க்காது. போராட்டங்களை கைவிட்டுவிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும்.
நீரை தேக்கி வைத்திருந்தால் அது நம் எல்லோரையும் அடித்துச் சென்றுவிடும். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராடும் உரிமை உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. ஒரு பக்கம் பாஜக எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷட்டர் உள்ளிட்டோர் மாநில அரசுக்கு ஆதரவு தருகிறார்கள். ஆனால் எடியூரப்பா, அசோகா, பிஒய் விஜயேந்திரா உள்ளிட்டோர் போராட்டம் நடத்துகிறார்கள். இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் பந்த் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். அதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி இந்த போராட்டம் கர்நாடகாவில் நடத்த கன்னட கூட்டமைபபின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தால் பெங்களூருக்கு ஆகஸ்ட் 3இல் விஜய் வரும் போது விமான நிலையம் முற்றுகையிடப்படும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையொட்டிதான் விஜய் இப்போது கர்நாடகாவுக்கு வரவேண்டாம் என டி.கே.சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதாவது 15 நாட்களுக்கு திநமும் 3500 கனஅடி நீரை தமிழகத்திற்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்க மறுத்து கன்னட அமைப்பினர் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகா முழுவதும் பந்த் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
