முதல்வர் ஸ்டாலினுக்கு சித்தராமையா திடீர் கடிதம்.. தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு கர்நாடகா சப்போர்ட்
சென்னை: மத்திய மாநில அரசு உறவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து புதிய தேசிய விவாதம் தேவை என்றும், அரசியல் சாசனம் மாற்றம் குறித்தும் கருத்து தெரிவிக்க ஒத்த கருத்துடைய மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் சித்தராமையா பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
தமிழகத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் உள்ள சாரம்சங்கள் குறித்து ஒத்த கருத்துகள் உடைய மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

மத்திய அரசு ஆளும் மாநிலங்கள் மற்றும் இதர மாநிலங்களுக்கு அளிக்கும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக கூறி வரும் ஸ்டாலின், இதற்கு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே சரியாக இருக்கும். மேலும் அதன் அடிப்படையில் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து புதிய தேசிய விவாதம் தேவை என்றும், அரசியல் சாசனம் மாற்றம் குறித்தும் கருத்து தெரிவிக்க ஒத்து கருத்துடைய மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், "இது ஒரு நல்ல விஷயம்.. அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு சரியான நேரம்.. கர்நாடக அரசும் இதற்கு ஒப்புதல் தருகிறது.
இந்த விஷயத்தை பொறுத்தவரை கவுன்சில் ஆஃப் மினிஸ்டர்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசோடு கர்நாடக அரசும் ஒத்துப் போகின்றது. இதில் ஒத்த கருத்துடைய மாநில அரசுகள் ஒன்று சேர்ந்தால் நானும் ஒன்று சேர்வேன்" என்று அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி வைப்பதில் இழுபறி நீடித்து வருவதால் அதற்கு சமாதானம் செய்யும் வகையில் இந்த பதிவு அமைந்திருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications