சித்தராமையாவுக்கு நெருக்கடி: அமலாக்கத்துறையால் 'முடா' நடேஷ் அதிரடி கைது! மாஜி கமிஷனர் தப்பி ஓட்டம்!
பெங்களூர்: முடகா முறைகேடு வழக்கில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு அமலாக்கத்துறையால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முடாவின் முன்னாள் இயக்குநர் நடேஷை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் முடா முன்னாள் ஆணையர் தினேஷ் தலைமறைவாகிவிட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான முடா, 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. இந்த வீட்டு மனை ஒதுக்கீடுகள் சட்டவிரோதம் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையும் களமிறங்கியது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் போது முடாவின் முன்னாள் கமிஷனர் தினேஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மேலும் முடா முன்னாள் இயக்குநர் நடேஷ் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் போது முடா நிறுவனம் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இதனையடுத்து முடா நடேஷை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் முதல்வ சித்தராமையாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications