குஜராத்தை போல எங்களுக்கும் நிதி கொடுங்க.. மோடியின் முகத்துக்கு நேராக சொன்ன கர்நாடக சிஎம் சித்தராமையா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நேற்று பெங்களூரில் வந்தே பாரத் ரயில் மற்றும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடியின் முன்பாகவே மத்திய அரசு நிதி தரவில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டை முன் வைத்தார். 3 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு வெறும் ரூ.7,548 கோடி மட்டுமே ஒதுக்கியதாகவும், மாநில அரசு 23,537 கோடி செலவு செய்ததாகவும் கூறிய அவர், குஜராத்தை போல எங்களுக்கும் அதிக நிதி தர வேண்டும் என்று கூறினார்.

நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் நேற்று வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

Siddaramaiah Bangalore PM Modi

சேவையை தொடங்கி வைத்த மோடி

முதலில் அவர் பெங்களூர் - பெலகாவி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ராகிகுட்டா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்ற மோடி, அங்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துனை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சித்தராமையா கோரிக்கை

அப்போது பிரதமர் மோடி முன்னிலையிலேயே கர்நாடக முதல்வர் சித்தராமையா மத்திய அரசு நிதி தரவில்லை என விமர்சித்து பேசினார். பெங்களூரில் நடைபெற்ற 3 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு வெறும் ரூ.7,548 கோடி மட்டுமே ஒதுக்கியதாகவும், மாநில ஆரசு 23,537 கோடி செலவு செய்ததாகவும் அவர் கூறினார். ஒப்பந்தப்படி மாநில அரசு மற்றும் மத்திய அரசு சமமாக நிதி ஒதுக்க வேண்டும் ஆனால் மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியதாகவும், குஜராத்தை போல எங்களுக்கும் அதிக நிதி தர வேண்டும் என்று சித்தராமையா கூறினார். இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

போதிய நிதியை வழங்கவில்லை

கடந்த 2005-ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது மஞ்சள் பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது. இதனால் நகரில் மெட்ரோ ரயில் பாதையின் நீளம் 96.10 கிலோ மீட்டராக அதிகரித்து உள்ளது. இதற்கு மாநில அரசு மட்டும் ரூ. 25,387 கோடி செலவு செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு ரூ.7,468 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சம அளவில் நிதி பகிர்ந்து கொள்ள வேண்டும் என போடப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு போதிய நிதியினை வழங்கவில்லை. மாநில அரசே அதிக நிதியை போட்டுள்ளது. யெல்லோ லைன் வழித்தடத்தில் தினமும் மூன்றரை லட்சம் பேர் வரை பயணம் செய்வார்கள்.

குஜராத்தை போல் எங்களுக்கும்

வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் பாதையின் நீளத்தை 220 கிலோ மீட்டராக அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இதில், தினமும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரிக்கும். 3-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. சர்ஜாப்புரா முதல் ஹெப்பால் வரை 3-வது ஏ மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி விஷயத்தில் குஜராத், மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக அழுத்தம் கொடுக்கிறது. அதே போல் கர்நாடகாவுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+