"சித்தராமையா தவறு செய்யவில்லை.. அதிகாரிகள் மீதே தவறு!" முடா விவகாரத்தில் விசாரணை ஆணையம் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: முடா எனப்படும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு வழக்கில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எந்தவொரு தவறும் இல்லை என ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். தேசாய் தலைமையிலான ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. மேலும், இந்த முறைகேடுகளுக்கு அரசு அதிகாரிகளே காரணம் என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் என்ற அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பு அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்திருந்தது. அதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் கூட விசாரணைகள் நடந்தன.

Karnataka CM Siddaramaiah Family Cleared in MUDA Scam Desai Panel Blames Officials for the fraud

விசாரணை அறிக்கை

இதற்கிடையே இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். தேசாய் தலைமையிலான ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. 2020- 2024 ஆண்டுகளுக்கு இடையில் மைசூரில் சித்தராமையா குடும்பத்தினர் சட்டவிரோத மாற்று நில ஒதுக்கீடு மோசடி குற்றச்சாட்டுகளைத் தேசாய் ஆணையம் விசாரித்தது. அதில் இழப்பீடாக நிலங்களை ஒதுக்குவது சட்டவிரோதம் என்று கூறமுடியாது என ஆணையம் தெரிவித்துள்ளது.. மாற்று நிலம் வழங்கப்பட்டதில் 2017இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

தவறில்லை

இது குறித்து அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறுகையில், "நாங்கள் இது குறித்து விசாரிக்க நீதிபதி பி.என். தேசாய் ஒரு நபர் ஆணையத்தை அமைத்திருந்தோம். அவர்கள் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர். அதில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.. சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அது கோரியுள்ளது. கர்நாடக அமைச்சரவை அந்த அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொண்டோம்" என்றார்.

அதிகாரிகள் இது தொடர்பாகக் கூறுகையில், "சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோரை ஆணையம் விடுவித்துள்ளது.. கேசரே கிராமத்தில் பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்திற்கு ஈடாக 14 மனைகள் ஒதுக்கப்பட்டதில் சித்தராமையா குடும்பத்தினர் மீது தவறில்லை என அந்த அரிக்கையில் கூறப்பட்டுள்ளது." என்றனர்.

பின்னணி

பார்வதியின் நிலங்களுக்குப் பதிலாக மைசூரில் விஜயநகர் லேஅவுட் 3வது மற்றும் 4வது கட்டங்களில் ஒதுக்கப்பட்ட இழப்பீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும், இந்த இழப்பீடு நிலங்கள் அவரது அசல் நிலத்தை விட அதிகச் சொத்து மதிப்பு கொண்டவை என்பதே குற்றச்சாட்டின் அடிப்படையாகும். இந்த விவகாரம் எழுந்த போது பாஜக உள்ளிட்ட அங்குள்ள எதிர்க்கட்சிகள் இதைப் பெரிய விவகாரமாக எழுப்பின.

ஆளுநரிடம் சந்தித்து இது தொடர்பாகப் புகாரும் அளித்தனர். அதைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். லோக் ஆயுக்தா போலீசார் இது குறித்து விசாரித்த நிலையில், அதிலும் சித்தராமையா, பார்வதி உள்ளிட்டோர் மீது தவறில்லை என்றே கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

பாஜக முறைகேடுகள்

இதற்கிடையில் 2019-20 மற்றும் 2022-23க்கு இடையில், பாஜக ஆட்சியில் இருந்தபோது, பெங்களூர் மாநகராட்சி பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்த நீதிபதி எச்.என். நாகமோகன் தாஸ் ஆணைய அறிக்கையையும் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், நேரமின்மை காரணமாக அதை அமைச்சரவை பரிசீலனை செய்யவில்லை. இந்த விவகாரம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+