மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கீடு புகார்- கர்நாடகா ஆளுநர் அனுமதிக்கு எதிராக முதல்வர் சித்தராமையா வழக்கு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியமான "மூடா" கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கர்நாடகா ஆளுநரின் இந்த அனுமதிக்கு எதிராக முதல்வர் சித்தராமையா வழக்கு தொடர உள்ளார். மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நாளை ஆளுநருக்கு எதிராக கண்டனப் போராட்டத்தை நடத்த உள்ளது.

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அல்லது ஆணையமான "மூடா" என்ற அரசு நிறுவனமானது முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த வீட்டு மனை ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்பது பாஜகவின் புகார். ஆனால் சித்தராமையாவோ, மனைவி பார்வதி பெயரிலான 3.14 ஏக்கர் நிலத்தை மூடா நிறுவனம்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தது. இதற்கு இழப்பீடாகவே 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன என விளக்கம் கொடுத்தார். ஆனாலும் இதனை பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் நிராகரித்தன.

karnataka Siddaramaiah

மூடா விவகாரத்தில் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பெங்களூர்- மைசூர் பாதயாத்திரை நடத்தின. மேலும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடமும் புகார் கொடுத்தன. அத்துடன் பெங்களூர் வழக்கறிஞர் பிரதீப்குமார், லோக் அயுக்தாவிலும் புகார் கொடுத்தார்.

இதனிடையே வழக்கறிஞர் பிரதீப் குமார், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூர் சினேகமயி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் அனுமதி கேட்டனர். இதனடிப்படையில் கடந்த மாதம் 26-ந் தேதி, முதல்வர் சித்தராமையா விளக்கம் தர கோரி ஆளுநர் கெலாட் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது. அத்துடன் கர்நாடகா அமைச்சரவைக் கூட்டத்தில், ஆளுநர் தமது நோட்டீஸை திரும்பப் பெறக் கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த பின்னணியில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ஆளுநர் கெலாட்டை வழக்கறிஞர் பிரதீப் குமார், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூர் சினேகமயி கிருஷ்ணா ஆகியோர் மீண்டும் சந்தித்து இந்த உத்தரவு நகலைப் பெற்றனர். இதனை கர்நாடகா மாநில தலைமைச் செயலாளரிடமும் மூவரும் கொடுத்தனர்.

இதனால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் சித்தராமையாவோ தாம் பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக கர்நாடகா முதல்வர் சித்தராமையா நாளை வழக்கு தொடர உள்ளார். அதேபோல ஆளுநரின் முடிவுக்கு எதிராக கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் கட்சி நாளை போராட்டம் நடத்தும் என கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் துணை முதல்வருமான டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+