"டிகே சிவக்குமார் நிச்சயம் முதல்வர் பதவியை ஏற்பார்!" சித்தராமையா அடுத்து சொன்ன வார்த்தை முக்கியம்
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வர் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இன்று காலை டிகே சிவக்குமார் வீட்டில் சித்தராமையா காலை உணவு சாப்பிட்டார். அதன் பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், டிகே சிவக்குமார் முதல்வர் பதவி ஏற்பது குறித்து சித்தராமையா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு இப்போது சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் இருக்கிறார். இருப்பினும், அங்குக் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து 2.5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அவருடைய தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

குழப்பம்
இந்த மோதல் டெல்லி தலைமை வரை சென்ற நிலையில், இரு தலைவர்களையும் முதலில் குழப்பத்தைக் குறைக்குமாறு தலைமை அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து முதலில் டிகே சிவக்குமாரை வீட்டிற்கு அழைத்து சித்தராமையா காலை உணவு விருந்து கொடுத்தார். அதைத் தொடர்ந்து இன்று சித்தராமையாவை வீட்டிற்கு அளித்து சிவக்குமார் விருந்து அளித்தார்.
அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக சித்தராமையா, சிவக்குமார் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். இரு தலைவர்களும் இடையே மோதல் அதிகரித்துவிட்டதாகத் தகவல் பரவும் நிலையில், தாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என்பதைக் காட்ட இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
எப்போது முதல்வராவார்?
அப்போது காங்கிரஸ் மேலிடம் அழைத்தால், டெல்லிக்கு செல்லத் தயாராக இருப்பதாக சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இருவரும் கூட்டாக அறிவித்தனர். டி.கே. சிவக்குமார் எப்போது முதல்வர் பதவியை ஏற்பார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "காங்கிரஸ் மேலிடம் எப்போது சொல்கிறதோ அப்பொழுது டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை ஏற்பார்" என்று சித்தராமையா பதிலளித்தார்.
சித்தராமையா மேலும் பேசுகையில், "டிசம்பர் 8ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் விவசாயிகள் பிரச்சனைகள் மற்றும் மாநிலத்தின் பிற விவகாரங்கள் விவாதிக்கப்படும்" என்றார். அதேநேரம் முதல்வர் விவகாரம் குறித்து அந்தக் கூட்டத்தில் பேசப்படுமா என்பது குறித்து சித்தராமையா எந்தவொரு தகவலையும் பகிரவில்லை.
டெல்லி செல்கிறோம்
அவர் மேலும், "ராகுல், சோனியா, பிரியங்கா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மேலிடத் தலைவர்கள் எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் இருவரும் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம். அவர்கள் எங்களை டெல்லிக்கு அழைத்தால், கண்டிப்பாகச் செல்வோம். மேலும், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். கர்நாடக எம்எல்ஏக்கள் மத்தியில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.. எதிர்க்கட்சிகளை ஒற்றுமையாக எதிர்கொள்வோம். நாங்கள் சகோதரர்களாக இணைந்து பணியாற்றுகிறோம்" என்றும் முதல்வர் தெரிவித்தார்.
என்ன நடந்தது!
கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கடந்த மாதத்துடன் 2.5 ஆண்டுகள் ஆகிறது. அப்போது முதலே சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.. 2023ல் காங்கிரஸ் வென்ற போது இரு தலைவர்களும் 2.5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என காங்கிரஸ் தலைமை உறுதியளித்ததாக டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதற்காக அவர்கள் டெல்லியிலும் முகாமிட்டிருந்த நிலையில், இப்போது அவர்கள் மீண்டும் பெங்களூர் திரும்பியுள்ளனர்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications