ஜேடிஎஸ்- காங். எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டால் கர்நாடகாவில் பாஜக ஆட்சி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கூண்டோடு ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்கள்..கர்நாடகாவில் ஆட்சி கவிழ்கிறது?- வீடியோ

    பெங்களூரு: கட்சிகளை வளைப்பது, எம்.எல்.ஏக்களை இழுப்பது போன்ற வழக்கமான நடவடிக்கைகளை கைவிட்டு கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைக்கும் புது வியூகத்தை அரங்கேற்றியுள்ளது பாஜக. தற்போதைய நிலையில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 13 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டால் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை கைப்பற்றிவிடும்.

    கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசின் 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். அப்படி 13 பேரும் ராஜினாமா செய்தால் முதல்வர் குமாரசாமி அரசு கவிழும்.

    அதேநேரத்தில் 13 பேர் ராஜினாமா செய்யும் நிலையில் பாஜக சட்டசபையில் தேவையான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையும் உருவாகி உள்ளது.

    கர்நாடகா சட்டசபையில்...

    கர்நாடகா சட்டசபையில்...

    225 எம்.எல்.ஏக்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபையில் ஒருவர் நியமன எம்.எல்.ஏ. ஆகையால் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 113 எம்.எல்.ஏக்கள். அண்மையில் காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

    குமாரசாமிக்கு ஆதரவு எத்தனை பேர்?

    குமாரசாமிக்கு ஆதரவு எத்தனை பேர்?

    இதனால் கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 77; ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் - 37 பேர் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி,கேபிஜே கட்சிகள் தலா 1 எம்.எல்.ஏக்களும் சுயேட்சை எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் முதல்வர் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மைக்கு அதிகமாக மொத்தம் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது.

    பாஜக ஆட்சி அமைக்கிறது

    பாஜக ஆட்சி அமைக்கிறது

    காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் ராஜினாமா செய்த நிலையில் கர்நாடகா சட்டசபை எம்.எல்.ஏக்க்களின் எண்ணிக்கை 222 ஆக குறைந்தது. பெரும்பான்மைக்கு தேவை 112 ஆனது. இன்னொருபுறம் பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தற்போதைய நிலையில் 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் குமாரசாமி அரசுக்கான எம்.எல்.ஏக்கள் ஆதரவு எண்ணிக்கை 104 ஆக குறையும். மேலும் 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யும் போது கர்நாடகா சட்டசபையின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை மொத்தம் 209 ஆக குறையும். அப்போது பெரும்பான்மைக்கு தேவை 105 எம்.எல்.ஏக்கள். இந்த எண்ணிக்கை பாஜக வசம் ஏற்கனவே இருப்பதால் எளிதில் ஆட்சியில் அமர்ந்துவிட முடியும்.

    நூலிழையில் கவிழும் குமாரசாமி அரசு

    நூலிழையில் கவிழும் குமாரசாமி அரசு

    அதாவது நூலிழையில் குமாரசாமி அரசு கவிழ்ந்துவிடும். இதற்காவேதான் தற்போது ஜேடிஎஸ்- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 13 பேரை திட்டமிட்டு ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது பாஜக. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, கட்சிகளை கபளீகரம் செய்வது போன்ற வழக்கமான பாணியில் இறங்காமல் பிற கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து 'நல்லவர்களாக' காட்டிக் கொண்டு ஆட்சியில் அமருகிறதாம் பாஜக.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+