பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

90 மில்லி ரம்..மிளகு தூக்கலா 2 ஆஃப் பாயில்..கொரோனா போயே போச்சு..கர்நாடகா காங். பிரமுகர் வீடியோ வைரல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கொரோனாவிடம் இருந்து விடுபட 90 மில்லி ரம்மும் ஆஃப் பாயிலும் சாப்பிட வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் பிரமுகர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு உலக நாடுகள் முழுவதும் விஞ்ஞானிகள் மருந்துகளை கண்டுபிடிப்பதில் படுதீவிரமாக இருக்கின்றனர். இன்னொரு பக்கம் பாரம்பரிய தமிழர் மருத்துவம், இந்திய மருத்துவம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

லாக் டவுன் நேரத்தில் பட்டர் சிக்கன் சாப்பிட ஆசை - அதற்கு கொடுத்த விலை ரொம்ப காஸ்ட்லிலாக் டவுன் நேரத்தில் பட்டர் சிக்கன் சாப்பிட ஆசை - அதற்கு கொடுத்த விலை ரொம்ப காஸ்ட்லி

கர்நாடகாவில் வைரல் வீடியோ

கர்நாடகாவில் வைரல் வீடியோ

இவற்றுக்கு அப்பால், கோமியம் குடிக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதேபாணியில் கர்நாடகா காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கவுன்சிலர்

காங்கிரஸ் கவுன்சிலர்

கர்நாடகாவின் மங்களூரு மாவட்டம் உல்லால் பகுதி கவுன்சிலராக இருப்பவர் ரவிச்சந்திர காட்டி. இவர்தான் இப்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ ரிலீஸ் செய்திருக்கிறார். கொரோனாவை குணப்படுத்த இந்த வீடியோவில் டிப்ஸ் கொடுத்திருக்கிறார் இந்த கவுன்சிலர்.

ரம் ப்ளஸ் ஆப்பாயில்

ரம் ப்ளஸ் ஆப்பாயில்

அப்படி என்னதான் டிப்ஸ் கொடுத்திருக்கிறார்? 90 மில்லி ரம் எடுத்து கொள்ளுங்கள்.. இதனுடன் 2 ஆஃப் பாயில்கள், இந்த ஆஃப் பாயில்களில் மிளகு அதிகம் சேர்க்க வேண்டும். ரம்மை குடித்துவிட்டு 2 ஆஃப் பாயில்களை விழுங்கிவிட்டால் போதும்.. கொரோனா பறந்து போய்விடும் என்பதுதான் கவுன்சிலர் அய்யா கொடுத்த அட்வைஸ்.

Recommended Video

    Corona இந்தியாவில் Stage-3 நிலையை எட்டிவிட்டது - IMA பரபரப்பு தகவல்
    வீடியோவால் சர்ச்சை

    வீடியோவால் சர்ச்சை

    இந்த வீடியோ இப்போது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. உல்லால் கவுன்சிலர் ரவிச்சந்திர காட்டியின் இந்த வீடியோ காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை தந்துள்ளது. இதனால் காட்டியிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் கர்நாடகா காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    English summary
    Karnataka Cong Councillor video went viral on Corona medicine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X