அமித்ஷாவுடன் தொடர்பில் இருக்கிறாரா டிகே சிவக்குமார்? கர்நாடகா காங்கிரஸில் பெரும் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே யுத்தம் தொடங்கி உள்ளது. இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் அமித்ஷாவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் ஒன்று வேகமாக பரவியது. இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கர்நாடகாவில் விரைவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்கிறதா? என்ற வினாவை எழுப்பிய நிலையில் டிகே சிவக்குமார் கடும் கோபத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2023 சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே போட்டி நிலவியது. இறுதியாக முதல்வர் பதவியை சித்தராமையா பெற்றார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியோடு சேர்த்து துணை முதல்வர் பொறுப்பு டிகே சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது.

மேலும் இரண்டரை ஆண்டுக்கு பிறகு டிகே சிவக்குமார் முதல்வராவார் என்ற ஒரு தகவல் அடிக்கடி உலா வருகிறது. இதுபற்றி டிகே சிவக்குமார், சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது இரண்டரை ஆண்டுகாலம் சித்தராமையா முதல்வராக நிறைவு செய்துவிட்டார்.
இதனால் முதல்வர் பதவியை டிகே சிவக்குமாரிடம் வழங்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். டிகே சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசியுள்ளனர். தற்போது மல்லிகார்ஜூன கார்கே பெங்களூரில் உள்ளார்.
நேற்று முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார். இன்று டிகே சிவக்குமார் சந்தித்து பேச உள்ளார். இது கர்நாடகா அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது. பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முதல்வராக சித்தராமையா தொடர்வாரா? இல்லாவிட்டால் முதல்வர் பதவி டிகே சிவக்குமாரிடம் வழங்கப்படுமா? என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, அதுமட்டுமின்றி கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தப்பிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே தான் டிகே சிவக்குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொடர்பில் உள்ளதாக தகவல்கள் பரவ தொடங்கியது. இதுபற்றி டிகே சிவக்குமார், ‛‛குமாரசாமி ஒரு துரோகி. நான் அமித்ஷாவுடன் தொடர்பில் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்'' என்று கூறினார். அதாவது ஜேடிஎஸ் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி தனது கட்சியின் வெள்ளி விழாவில் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‛‛கர்நாடகாவில் பல்வேறு விஷயங்கள் அரசியல் ரீதியாக நடக்கிறத. இதனால் கட்சி தலைவர்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்'' என்று கூறினார். டிகே சிவக்குமார், அமித்ஷா அல்லது காங்கிரஸ், பாஜகவின் பெயரை அவர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் இது அதிக கவனம் பெற்றது.
அதேவேளையில் டிகே சிவக்குமார், அமித்ஷாவுடன் தொடர்பில் இருப்பதாக குமாரசாமி பேசியதாக தகவல்கள் பரவின. இதனால் தான் குமாரசாமியை துரோகி என விமர்சனம் செய்த டிகே சிவக்குமார் அமித்ஷாவுடன் தொடர்பில் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று கூறியிருந்தார். அதன்பிறகு குமாரசாமி அப்படி எதுவும் பேசவில்லை என்பதை அறிந்த டிகே சிவக்குமார் தனது பேச்சை வாபஸ் பெற்றார். இந்த குழப்பம் கர்நாடகா அரசியலில் இன்னும் பரபரப்பை பற்ற வைத்தது.
இந்த விவகாரம் பற்றி கர்நாடகா பாஜக தலைவராக இருக்கும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கூறுகையில், ‛‛டிகே சிவக்குமார் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை. இதுதொடர்பாக சில காங்கிரஸ் தலைவர்கள் பொய்யான செய்திகளை பரப்பி விடுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டிகே சிவக்குமார் தொடர்பில் உள்ளதாக போலியான செய்திகளை பரப்புகின்றனர்.
இதில் உண்மை கிடையாது. உண்மை என்னவென்றால் சித்தராமையாவும், டிகே சிவக்குமாரும் மக்களின் நலத்திட்டங்களை பற்றி கவலை கொள்ளாமல் முதல்வர் பதவியை பெற்று அதிகாரத்தை அடைவதற்காக அடித்து கொள்கிறார்கள்'' என்று கூறினார். இதன்மூலம் டிகே சிவக்குமார், அமித்ஷாவுடன் தொடர்பில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
-
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
சல்லி சல்லியா போகுதே என்டிஏ ஆசை.. டிடிவி தினகரன், அன்புமணி கறாரால் அதிரும் பாஜக! அமித்ஷா முடிவு என்ன -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications