டிகே சிவக்குமாருக்கு மட்டும் சிஎம் பதவி போகக்கூடாது.. பிளான் Bஐ இறக்கும் சித்தராமையா? எல்லாமே மாறுதே
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. சித்தராமையாவுக்கு எதிராக டிகே சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் இதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்தச் சூழலில் சத்தமே இல்லாமல் சித்தராமையா ஆதரவாளர்கள் பிளான் Bஐ ரெடி செய்துள்ளனர். இது டிகே சிவக்குமாருக்கு செக் வைப்பதாக இருக்கும்.
கர்நாடக காங்கிரசில் இப்போது திடீரென யார் முதல்வர் என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் இதில் முட்டி மோதி வருகிறார்கள். ஒரு பக்கம் டிகே சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர். 2023ல் ஒப்புக்கொண்டதை போல தங்கள் தலைவருக்கு முதல்வர் பதவியைத் தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சித்தராமையா
இன்னொரு பக்கம் முதலமைச்சர் சித்தராமையாவின் ஆதரவாளர்களும் டெல்லிக்குப் போய் இருக்கிறார்கள். தங்கள் தலைவரை முதலமைச்சர் பதவியில் தக்கவைக்கக் கட்சி அவர்களும் டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுக்க ரெடியாகிவிட்டனர். முதல்வர் பதவி தொடர்பாகக் கட்சியில் குழப்பம் இருப்பது உண்மை தான் எனச் சொல்லியிருக்கும் சித்தராமையா, கட்சி மேலிடம் உடனடியாக இதில் தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். தற்போதைய சூழலில் முதல்வர் பதவியில் மாற்றம் வராது என்றே சித்தராமையா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
பிளான் பி
அதேநேரம் மாற்றம் வருவது போன்ற சூழல் ஏற்பட்டால் உடனடியாக இன்னொரு பிளானை சித்தராமையா ஆதரவாளர்கள் ரெடியாக வைத்துள்ளனர். அதாவது சித்தராமையா சிஎம் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கொடுக்கக்கூடாது என வலியுறுத்துவதே அவர்களின் திட்டம். சிவக்குமாருக்கு பதிலாக சித்தராமையா ஆதரவாளர்களில் ஒருவருக்கே முதல்வர் பதவியைத் தர வேண்டுமாம். இரு தரப்பிற்கும் இடையே மோதல் எந்தளவுக்கு மோசமாகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
குறிப்பாக சித்தராமையாவின் ஆதரவாளரும், செல்வாக்கு மிக்க தலித் தலைவருமான உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவை முதல்வர் பதவிக்குக் கொண்டு வரப் பார்க்கிறார்கள். அவரும் கூட வெளிப்படையாகவே தான் முதல்வர் ரேஸில் இருப்பதாகக் கூறியிருந்தார். அவரை தான் சித்தராமையாவுக்கு மாற்றாக முன்மொழியத் திட்டமிட்டுள்ளனர்.
திட்டம் உறுதி
கடந்த புதன்கிழமை பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சித்தராமையா ஆதரவாளர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. கர்நாடகாவில் முதல்வர் யார் என்ற உட்கட்சி பிரச்சினையே தொடர்ந்து வருவதால் அங்கு காங்கிரஸ் இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விரைவில் இந்த விவகாரத்தைச் சரி செய்யவுள்ளதாக கார்கே கூறியுள்ளார். சோனியா, ராகுலுடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் பிரச்சினையைத் தீர்ப்பேன் என அவர் சொல்லியிருந்தார்.
இந்த விவகாரத்தில் டிகே சிவக்குமார் எந்தவொரு இடத்திலும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. காங்கிரஸ் தலைமை அல்லது சித்தராமையாவை தாக்கி பேசவில்லை. சொல்லப்போனால் சித்தராமையாவுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். அதேநேரம் சித்தராமையாவை மாற்ற வலியுறுத்தும் அவரது ஆதரவாளர்களையும் அவர் அமைதிப்படுத்துவது போல தெரியவில்லை. இதனால் அங்கு குழப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
பின்னணி
2023 கர்நாடக தேர்தலை சித்தராமையா-டி.கே. சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் இணைந்து எதிர்கொண்டது. இருப்பினும், தேர்தல் முடிந்த கையோடு யார் முதல்வர் என்பதில் மோதல் தொடங்கியது. சில நாட்கள் வரையிலும் இந்த மோதல் இருந்தது. டெல்லி தலைமை தலையிட்ட பிறகே சித்தராமையா முதல்வராக அறிவிக்கப்பட்டார். டி.கே. சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், கட்சியின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
அப்போது 2.5 ஆண்டுகளில் முதல்வர் பதவி டிகே சிவக்குமாருக்கு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், அதைக் காங்கிரஸ் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இப்போது 2.5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications